
பச்சரிசியா? புழுங்கல் அரிசியா? இட்லி தோசைக்கு எது சிறந்தது? மென்மையும், மொறுமொறுப்பும் தருவது எது?
தோசை மற்றும் இட்லிக்கு எந்த மாவு சிறந்தது என்பது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தென்னிந்திய உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த இரண்டு உணவுகள் என்றால் அது தோசை மற்றும் இட்லி தான். நம்முடைய வீடுகளில் பெரும்பாலும் ஒரு வாரத்திற்கு நாம் அதிகமாக சாப்பிடும் உணவுகள் இட்லி மற்றும் தோசையாகத்தான் இருக்கும். இந்த இரண்டு உணவுகளுக்கும் நான் ஒரே மாவை தான் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக புழுங்கல் அரிசி மாவுதான் அனைவரும் பயன்படுத்த விரும்புவார்கள். ஏன் பச்ச அரிசி மாவை பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் தெரியுமா?
இந்த இட்லி மாவு தொடர்பாக உணவு தொடர்பாக வலை தள கட்டுரை எழுதும் ஸ்வேதா சிவக்குமார் ஒரு ஆய்வை செய்துள்ளார். அவர் தன்னுடைய வீட்டில் ஒரு அளவிலான பச்ச அரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகிய இரண்டையும் எடுத்து உழுத்தம் பருப்பு உடன் சேர்த்து தனி தனி மாவாக அரைத்துள்ளார். இந்த இரண்டு மாவையையும் சில மணிநேரங்கள் சூர்ய வெளிச்சத்தில் மூடிய பாத்திரத்தில் வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் பார்த்த போது பச்ச அரிசி மாவைவிட புழுங்கல் அரிசி மாவு நன்றாக புளிக்கும்தன்மையை பெற்றுள்ளது.
அதன்பிறகு இந்த இரண்டு மாவையும் இரவு முழுவதும் அவர் அதே பாத்திரத்தில் வைத்துள்ளார். அடுத்த நாளை காலையில் பச்ச அரிசி மாவும் புழுங்கல் அரிசி மாவை போல் நன்றாக புளிக்கும்தன்மையை பெற்றுள்ளது. தற்போது நன்றாக புளித்துப்போன இரண்டு மாவுகளையும் வைத்து முதலில் இட்லி ஊற்றியுள்ளார்.அதில் பச்ச அரிசி மாவு இட்லியை விட புழுங்கல் அரிசி மாவு இட்லி சற்று நன்றாக வந்துள்ளது. ஏனென்றால் அது பச்ச அரிசி மாவைவிட வேகமாக புளித்துப்போனதால் நன்றாக வந்துள்ளது.
Conclusions:
— Swetha Sivakumar (@Upgrade_My_Food) December 10, 2021
Batter
Parboiled rice batter ferments quickly and more easily compared to raw rice batters
Idli
Idli rises better, has more spring and is poofier, when made with parboiled rice compared to raw rice
Dosa
Dosa made with raw rice batter is crispier and tastier.
அதேபோல் இந்த இரண்டு மாவையையும் வைத்து அடுத்து தோசை ஊற்றியுள்ளார். அதில் புழுங்கல் அரிசி மாவின் தோசை ஒட்டாமல் நன்றாக வந்துள்ளது. ஆனால் பச்ச அரிசி மாவு ஒட்டிக் கொண்டுள்ளது. ஆனால் அது புழுங்கல் அரிசி மாவு தோசையைவிட சற்று மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் புழுங்கல் அரிசி மாவு வேகமாக புளிக்கும்தன்மையை பெரும் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த காரணத்தில் தான் பெரும்பாலானோர் இட்லிக்கு புழுங்கல் அரிசியையே பயன்படுத்துகின்றனர் என்பது நமக்கு தெரியவந்துள்ளது. மேலும் படிக்க: `மாதவிடாய் நோய் அல்ல!’ : பீரியட்ஸுக்கு App.. டாப்சி பேசும் periods positivity..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

