The Happiest Country: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ரிலீஸ்! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
The Happiest Country: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஃபின்லாந்து நாடு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ’Sustainable Development Solutions Network’ என்ற நிறுவனம் சமூக பொருளாதாரம், சுகாதராம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. உலக அளவில் பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் Gallup World Poll என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்:
பின்லாந்து நாட்டிற்கு அடுத்ததாக டென்மார்க், ஐஸ்லாந்து நாடுகள் 2-வது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருமானம், சுகாதாரம், தனிநபர் முக்கிய முடிவுகள் எடுக்கும் உரிமை, சக மனிதர் மீதான நம்பகத்தன்மை, சமூக நல்லிணக்கம், ஊழல் இல்லாத நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், ஃபின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. இதுவரை முதல் 20 இடங்களில் இடம்பெற்ற அமெரிக்காவும் ஜெர்மனியும் இந்தாண்டு முறையே 23-வது, 24-வது இடத்தில் உள்ளன. உக்ரைன் 92-வது இடத்திலும் ரஷ்யா 72-வது இடத்திலும் உள்ளது.
6-வது இடத்தில் நெதர்லாந்து, 7-வது இடத்தில் நார்வே, 9-வது இடத்தில் ஸ்விட்சர்லாந்து, 10-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த ஆய்வில் வயது அடிப்படையிலும் மகிழ்ச்சியான இடங்களை வெளியிட்டுள்ளன.
அதன்படி, 30-வயதிற்குள்ள மகிழ்ச்சியான நாடுகள் என்ற பிரிவில் லக்சம்பர்க், இஸ்ரேல், செர்பியா, ஐஸ்லாந்து, டென்மார்க், லூக்சிம்ப்ரோக், ஃபின்லாந்து, ரொமானியா,நெதர்லாந்து, Czechia ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நாடுகள்:
60 வயதிக்குள்ளாக மகிழ்ச்சியாக வாழ தகுந்த இடமாக உள்ள நாடுகளில் டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து, நியூஸிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பிரிவில் இந்தியா 121-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆய்வில் உலக அளவில் இளம் பெண்கள் மகிழ்ச்சியான குழு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இளம் வயத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நடுத்தரவயதில் உள்ளவர்கள் குறைந்த அளவு மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்தியர்கள் வாழ்தலில் திருப்தியடைவதற்கு திருமணம், சமூக பங்களிப்பு, உடல்நலம் உள்ளிட்டவைகளின் பொறுத்தே அமைவதாக கூறப்பட்டுள்ளது. நடுத்தர வயது அடல்ஸ் திருப்தி நிலையில், 6.32 புள்ளிகள் குறிப்பிட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சராசரியாக வயதான இந்திய பெண்களை விட வயதான ஆண்கள் திருப்தியுடன் வாழ்வதாகவும் ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.