முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா? இறைச்சி அதிகம் சாப்பிடலாமா?- மருத்துவர் அரவிந்த்ராஜ் விளக்கம்
இறைச்சி அதிகமாக சாப்பிட வேண்டாம், முட்டையின் மஞ்சள் கருவை அதிகம் சாப்பிடாதீங்க என்று கூறுவதில் உண்மை உள்ளதா?
பல நாட்களாக இருந்த சந்தேகம் ஒன்றின் மீது இன்று ஓரளவு வெளிச்சம் வீசி பதில் கிடைக்க தொடங்கியிருக்கிறது. நோயாளிகளிடம் 'சிக்கன் மட்டன்லாம் அவ்ளோவா சாப்டாதீங்க', 'முட்டைல மஞ்சள் கரு கெடுதி' என கூறும் மருத்துவர்கள் அவ்வாறு கூற காரணம் என்ன?? ஏனென்றால் மருத்துவ புத்தகங்களும் ஆய்வுகளும் அவ்வாறு குறிப்பிடவில்லையே.
மேலை நாட்டு மருத்துவர்கள் இவ்வாறான அறிவுரையை நோயாளிகளுக்கு வழங்கியதில்லையே!! இந்தியாவில் மட்டும் ஏன் என்ற கேள்வி பல நாட்களாக இருந்தது. இந்தியாவில் உள்ள சாதி, மத மூடத்தனத்தை புகுத்த மருத்துவம் என்பதை கருவியாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே அந்த கேள்விக்கு பதிலாய் அமைந்துள்ளது. கடந்த 70 வருடங்களில் இந்திய புகழ்பெற்ற மருத்துவகல்லூரியில் மருத்துவம் பயின்றவர்களில், 1990 வரையில் சுமார் 89% பயின்றவர்கள் அசைவம் உண்ணாத இந்து மத மருத்துவர்கள். ஆக, இவர்களின் மத போதனைகளை புகுத்த மருத்துவம் ஓர் கருவியாகிப்போனது. மருத்துவ புத்தகத்தில் கூட எவ்வளவு இறைச்சி உண்பது என்பது பல நாட்களாக Controversy-இல் உழன்று வந்த விஷயம். ஆனால், கடந்த 20 வருடங்களில் மருத்துவம் முடித்த அசைவம் உண்ணும் டாக்டர்கள் பலர் இந்த controversy-ஐ உடைத்து தினமும் இறைச்சி உண்ணலாம், முட்டையை மஞ்சள் கருவோடு கண்டிப்பாக உண்ணலாம் என கூறி வருகின்றனர்.
இறைச்சியை அதிகமாக உண்ணக்கூடாது என இந்திய மருத்துவர்கள் கூறிவந்த அதே காலகட்டத்தில் தான் மேலைநாடுகளில் Atkins Diet, Paleo Diet ஆகியவை பிரபலமாகி சக்கைப்போடு போட்டன. ஆக, இறைச்சியை பற்றிய தெளிவைப்பெற, அக்கால இந்திய மருத்துவர்கள் தயாராக இல்லை. ஏனெனில், அவர்களின் மத, இன கொள்கையை அவர்கள் கொண்டு சென்றிட இந்த இறைச்சியின் மீதான சர்ச்சையே அவர்களுக்கு சாதகமாய் போனது. இறைச்சி உண்ணாதே என கூறும் மருத்துவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல, தீவிர மதவாத மனநிலை கொண்ட சங்கிகள் தான். தினமும் இறைச்சி உண்ணலாம் என கூறுபவனே அறிவியலின் பக்கம் நூறு சதவிகிதம் நிற்கும் மருத்துவன்.