காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!
மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும்.
மேகங்கள் குளம் போல் தேங்கி நிற்பதை, அவற்றுக்கு மேலே சென்று பார்க்க, அதிக செலவு செய்ய வேண்டியதில்லை, உங்கள் குடும்பத்தை விட்டு வெகுதூரம் பயணிக்க வேண்டியதில்லை. கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு என்னும் சிர்க பூமி, இதனை அள்ளி தருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செம்ப்ரா சிகரத்தில் இந்த காட்சியை காணலாம்.
வயநாடு
இந்த குளம் 'ஹிருதயசரசு' (இதய வடிவ ஏரி) என்று அழைக்கப்படுகிறது. வயநாட்டின் மிக உயரமான மலைச் சிகரமான செம்ப்ரா சிகரம், நீலகிரி மலைகள் மற்றும் கோழிக்கோடு ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளால் சூழப்பட்டுள்ளது. சாகசத்துடன் கூடிய இயற்கை பயணம் செல்ல விரும்பினால், மறக்காமல் செல்ல வேண்டிய இடம் இது.
செம்ப்ரா ஏரி மலையேற்றம்
மாநில வனத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட செம்ப்ரா ஏரி மலையேற்றமானது, செம்ப்ரா மலையின் அடிவாரத்திற்கு அருகில் தொடங்கி, மலையின் பெரிய தேயிலைத் தோட்டங்கள் வழியாக உங்களை உச்சிக்கு அழைத்துச் செல்லும். மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக கான முடியும்.
இதய வடிவ ஏரி
வயநாட்டின் அற்புதமான காட்சிகளுக்கு மத்தியில் மேகங்கள் அடிவானத்தைத் தொடுவதையும் கான முடியும். குளிரான வெப்ப நிலையில் அதனை ரசிப்பது ஒரு பேரானந்ததை தரும். மூன்று கிலோமீட்டர் நடைப்பயணமாக நடந்து, செம்ப்ரா ஏரியை அடைய வேண்டும். இது வனத்துறை அடிவார முகாமில் தொடங்கி செம்ப்ரா ஏரியில் முடிவடைகிறது. செம்ப்ரா ஏரியின் பரந்த காட்சியை காணவேண்டும் என்றால், மலையேற்ற பாதைதான் சிறந்தது. நீங்கள் முதலில் மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கிருந்து ஏரியை பார்த்து, பின்னர் ஏரியை நோக்கி கீழே செல்லலாம்.
இதுவரை வறண்டதில்லை
பல உள்ளூர் பழங்குடியினர் வசிக்கும் இந்த ஏரி, அடிவார முகாமில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மணிநேரப் பயணமாகும், முழு மலையேற்றமும் சுமார் 3.5 மணிநேரம் ஆகும். மாநில வனத்துறையின் அனுமதி இருந்தால், நீங்கள் செம்ப்ரா மலையில் கூட முகாமிட்டு, சூரிய அஸ்தமனத்திற்கு முன் அடிவார முகாமுக்குத் திரும்பலாம். செம்ப்ரா ஏரிக்கு பின் பல கதைகளும் வரலாறும் உள்ளன. உதாரணமாக, செம்ப்ரா ஏரி என்றுமே வறண்டதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் புராணத்தின் படி, ராமரின் மனைவியான சீதை, செம்ப்ரா ஏரிக்கு அருகில் ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. செம்ப்ரா ஏரிக்கு மலையேறும் போதே நம்மை கூட்டி செல்லும் கைடு இதே போன்ற கதைகள் பலவற்றை கூறுவார்.