Trending Rice Recipe | ஊட்டச்சத்து நிறைந்த, சுவையான அரிசி புட்டிங்.. New Year ரெசிப்பி ட்ரெண்டிங்கில்..
மட்டை அரிசியினால் ( சிவப்பு அரிசி) செய்யக்கூடிய புட்டை நம் முன்னோர்கள் பெண்கள் பூப்படைந்தக் காலத்தில் அதிகமாக கொடுக்கும் வழக்கம் உள்ளது.
புழுங்கல் அரிசி, பச்சையரிசி, சிவப்பு அரிசி என பல வகையான அரிசி மாவைக்கொண்டு விதவிதமான புட்டுகள் செய்வதை நாம் பார்த்திருப்போம். அதிலும் இந்த புட்டில் சர்க்கரைக் கலந்து சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுப்பொருள்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்நிலையில் இன்று நாம் பார்க்க விரும்பும் ஒரு ரெசிபி அரிசி புட்டிங். குறிப்பாக முன்பு மின்சாரம் இல்லாத காலத்திலும், விளக்குகளின் வெளிச்சத்தில் சிறிய அடுப்பைக்கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான இனிப்புப் பண்டம் இன்று நவநாகரீமான புட்டிங் ஸ்டைலில்..
அரிசி, சர்க்கரை மற்றும் தேங்காய்பால் கொண்டு மேற்கொள்ளப்படும் செய்யப்படும் இந்த உணவுப்பொருள் அனைவருக்கும் விருப்பமான மற்றும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய விருந்தாக அமையும். இப்படி மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய அரிசி புட்டிங்கை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பது குறித்து நாமும் அறிந்துக்கொள்வோம்.
அரிசி புட்டிங் செய்யும் முறை :
தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ் பால் – 3 கப் ( unsweetened oat milk)
நாட்டுச்சர்க்கரை- ¼ கப்
உப்பு – ¼ தேக்கரண்டி
அரிசி – ¼ கப்
வெனிலா எசன்ஸ் – ½ தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பால், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வேண்டும். பின்னர் அதனுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது அரிசி மென்மையாக தயிரின் நிலைத்தன்மை வரும் வரை ( கெட்டியாகும் வரை) சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்து சமைக்க வேண்டும். பிறகு தேவைப்பட்டால் வெண்ணிலா எசன்சை ஊற்றிக் கிளறவும். இதன் பிறகு சூடாகவோ அல்லது ஆற வைத்தோ அரிசி புட்டிங்கை நாம் சாப்பிடலாம்.
இதோடு உங்களது அரிசி புட்டிங்கின் கூடுதல் சுவை தேவைப்படும் பட்சத்தில் வேகவைத்த திராட்சை, நறுக்கிய அத்திப்பழங்கள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் ஓட்ஸ் பாலுக்குப்பதில் தேங்காய்ப்பாலை சேர்த்து அரிசி புட்டிங் செய்யலாம். அரிசி மாவில் செய்யக்கூடிய புட்டிங்கைப்போன்று கூடுதல் சுவையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய ஒருவகையான ரெசிபியாக நிச்சயம் இருக்கும்.
இதேபோன்று அரிசி புட்டு செய்யும் வழக்கம் உள்ளது. அரிசியை ஊறவைத்து எடுத்துக்கொள்வதோடு அதனை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரை, பால், ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து இட்லி குக்கரில் வேகவைத்து புட்டு செய்யலாம். அதிலும் மட்டை அரிசியினால் ( சிவப்பு அரிசி) செய்யக்கூடிய புட்டை நம் முன்னோர்கள் பெண்கள் பூப்படையும் காலத்தில் அதிகமாக கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஏனென்றால் இதில் வைட்டமின் பி1 பி3 பி6 போன்ற சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்து, மக்னீசியம் , மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்களும் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பதோடு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கவும் உதவியாக உள்ளது. மேலும் கர்ப்பப்பை வலுப்பெறவும் இவ்வகையான புட்டுகள் உதவியாக இருந்துவருகிறது.