Pet Health: உங்கள் செல்லப் பிராணிகளின் உணவு ஆரோக்கியமானதா? கவனிக்க வேண்டியவை!
பெரும்பாலான செல்லப்பிராணி உணவுகள் விலங்குகள் உட்கொள்ளத் தகுதியற்றவை.
பெரும்பலானவர்களுக்கு செல்லப் பிராணிகள் வளப்பது என்பது மிகவும் விருப்பமானது. பூனை, நாய், லவ்பேர்ட்ஸ், மீன்கள் என பல்வேறு விலங்கினங்களை செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
செல்லப்பிராணிகள் எல்லா உணவுகளையும் சாப்பிட்டுவிடாது. அவைகளுக்கும் ஒவ்வைமை போன்ற பல சிக்கல்கள் உண்டு. சரியான உணவு வழங்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு நாள்பட்ட காது அழற்சி மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகள் முதல் நாள்பட்ட வயிற்றுப்போக்கு போன்றவைகள் ஏற்படக் கூடும்.
ஒரு காலத்தில் நாய், பூனைக்கு உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு பால், தயிர் போன்றவைகளுடன் உணவு கொடுத்து வந்தோம். இன்றைக்கு சந்தையில் பல பிராண்டுகளில் செல்லப் பிராணிக்கான பிரத்யேகமான உணவு வகைகள் கிடைக்கின்றன. ஆனால் இதில் சத்து இருப்பதாக நம்புகிறோம். ஆனால் அது உண்மையில்லை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் எந்த அளவிற்கு நமக்கு கெடுதலோ, அதே அளவிற்கு நம் செல்லப் பிராணிகளுக்கும் ப்ராசஸ்ட் ஃபுட் அவர்களுக்கும் ஆரோக்கியம் இல்லை.
ஆர்கானிக் உணவுகள்:
நமக்கான உணவை வாங்கும் போது அதில் உள்ள லேபிள்களை முழுமையாகப் பார்ப்போம். ஆனால் செல்லப் பிராணிகளின் உணவுகளில் பலர் அதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. பெரும்பாலான செல்லப்பிராணி உணவுகள் விலங்குகள் உட்கொள்ளத் தகுதியற்றவை. சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெட் ஃபுட்களில் சல்பேட்டுகள், பாரபின்கள், சிலிகான்கள் மற்றும் செயற்கையான வாசனை திரவியங்கள் போன்றவைகள் செல்லப் பிராணிகளுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்டவை. இதற்கு மாற்றாக, நீங்கள் வீட்டிலேயே உணவு தயாரித்து கொடுக்கலாம்.
https://www.bennysbowl.com/ பென்னிஸ் பவுல் என்ற நிறுவனம் ஆர்கானிக் முறையில் உணவுகளைத் தயாரிக்கின்றனர்.
ஆர்கானிக் உணவுகளின் பலன்கள்: ஆர்கானிக் உணவுகள் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் தோல் ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாக்கிறது.
மரபணு மாற்றப்படாதா உணவுகள்(Non-Genetically modified):
மனிதர்கள் உண்ணும் மரபணு மாற்றப்பட்ட உணவுகள் பல ஆண்டுகளாக மிகவும் விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் செல்லப்பிராணிகளுக்கான உணவுகள் மரபணு மாற்றப்படுவது குறித்து உண்மையில் அதிகம் பேசப்படவில்லை. இந்த வகையான உணவை தொடர்ந்து உங்கள் செல்லப் பிராணிகளுக்கு கொடுத்து வந்தால், அவைகளின் உடல் ஆரோக்கியம் நாளடைவில் மோசமாக பாதிக்கப்படும்.
உங்கள் செல்லப் பிராணிகளின் உணவில் பொதுவாக கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி, கல்லீரல் மற்றும் இதயம், பூசணி, கேரட், பச்சை பீன்ஸ் மற்றும் பழுப்பு அரிசி ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்து சேர்ந்து ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட உனவிற்கு
ப்ரோக்கோலி, கேரட், பூசணி, பீன்ஸ், பட்டாணி, காலிஃபிளவர் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற காய்கறிகளுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆளிவிதை எண்ணெய் ஆகியவற்றுடன் வேக வைத்து உணவைத் தயாரித்துக் கொடுக்கலாம். இவை உங்கள் செல்லப் பிராணிகள் உணவில் சேர்க்கக்கூடிய பாதுகாப்பான உணவு வகையாகும். செல்லப் பிராணிகளின் உடல்நலத்திறுகு இவை நிறைய நன்மைகள் கொடுக்கக் கூடியவை.
பயன்கள்: இவை நல்ல சுவை மிக்கவை. செல்லப் பிராணியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரான எடையுடன் இருக்க உதவுகிறது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளே உங்கள் செல்லப் பிராணிகளுக்கு நல்லது. இன்ரைய காலத்தில் செல்லப் பிராணிகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம், கொடுக்கக் கூடாது என்ற தகவல்கள் நிறைய கிடைக்கின்றன. மேலும், கால்நடை மருத்துவர்களிடம் உங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
இயற்கையான முறையில் செல்லப் பிராணிகளுக்கான உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுன் இணையதள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.