Dengue Diet : டெங்கு சீசன் உஷார்! நோய் பாதித்தால் பின்பற்ற வேண்டிய டயட் இதுதான்..
டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் என்ன மாதிரியான உணவு முறையை பின்பற்றலாம் என்பது குறித்து ஃபோர்டிஸ் மேமோரியல் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட்டின் க்ளினிக்கல் நியூட்ரஷனிஸ்ட் தீப்தி கதுஜா தெளிவாக விளக்கியுள்ளார்.
மழை சீசன் மகிழ்ச்சியைத் தருவதோடு பருவகால நோய்களையும் கூடவே தந்துவிடுகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல். டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் என்ன மாதிரியான உணவு முறையை பின்பற்றலாம் என்பது குறித்து ஃபோர்டிஸ் மேமோரியல் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட்டின் க்ளினிக்கல் நியூட்ரஷனிஸ்ட் தீப்தி கதுஜா தெளிவாக விளக்கியுள்ளார்.
• நீர்ச்சத்து நிறைந்த ஆகாரம்:
நிறைய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரம் அவசியம். தண்ணீர். வெதுவெதுப்பான கஷாயங்கள். மூலிகை தேயிலை நீர், சூப் போன்றவற்றை உட்கொள்ளலாம். டெங்கு காய்ச்சலின் போது சூப் போல் குளிரான ஜூஸும், எலுமிச்சை சாறும் கூட உட்கொள்ளலாம். லஸ்ஸி, மோர் கூட அருந்தலாம். எதுவும் சாத்தியப்படாவிட்டால் தேங்காய் தண்ணீர் அருந்தலாம். அது ப்ளேட்லட் அளவை உயர்த்தும். இந்த திரவங்கள் உடலை நீர்ச்சத்து பெறச் செய்யும். பப்பாளி இலை தண்ணீர் கூட பரிந்துரைக்கப்படுகிறது. இவை ப்ளேட்லட் எண்ணிக்கையை உயர்த்துவது உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் கூட இவை உடலுக்கு நீர்ச்சத்து தரும் என்பதில் ஐயமில்லை.
• பழங்கள்
பருவமழை காலத்திற்கே உரித்தான் பேரிக்காய், ப்ளம்ஸ், செர்ரி, பீச், பப்பாளி, ஆப்பிள், மாதுளை ஆகியனவற்றை உட்கொள்ளலாம். இவை வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து ஆகியன நிரம்பியவையாகும். இவற்றில் செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதுபோல் எதிர்ப்பாற்றலையும் உருவாக்கும் திறன் உள்ளது.
• காய்கறிகள்
வெவ்வேறு நிறத்திலான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம் சேர்க்கும். வைட்டமின் ஏ, சி, ஜிங்க், மெக்னீஸியம் ஆகியன நிறைவாகக் கிடைக்கும். இவை உடலில் நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கும்.
• Spices
மஞ்சள், இஞ்சி, மிளகு, லவங்கப் பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகிய வாசனைப் பொருட்கள் பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, நுண்ணுயிரிகள் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு கொண்டவை. இவை உடலில் நோய் எதிர்ப்பாற்றலை சீராக்கும். T-cellsஐ சீர்படுத்தும். அன்றாட சமையலில் இதுபோன்ற வாசனைப் பொருட்களை சேர்த்துக் கொள்வது நலம் சேர்க்கும்.
• உலர் கொட்டைகள்
உலர் கொட்டைகள் மற்றும் விதைகள் புரதச் சத்து நிறைந்தவை. அது மட்டுமல்லாது நல்ல கொழுப்பு, வைட்டமின், மினரல்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் கொண்டுள்ளன.
• ப்ரோபயாடிக்ஸ்
தயிர், யோகர்ட் போன்ற உணவுகளில் ப்ரோபயாடிக்ஸ் நிறைய உள்ளன. இவற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அச்சுறுத்தும் டெங்கு:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் சமாளிக்க முடியாத நோயாக உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சில வருடங்களாகவே ‘மர்ம காய்ச்சல்’ என்கிற பெயரில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நிலவி வருகிறது.
டெங்கு குறித்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாததே காய்ச்சல் பரவுவதற்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, எப்படி அது பிறருக்குப் பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அது வேறுபடும்?
வைரஸ் எப்படி உருவாகிறது?
டெங்கு ஒரு வகை வைரஸால் பரவும் நோய்.டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), மற்றும் டென்-4 (DENV-4) என நான்கு வகை டெங்கு வைரஸ்கள் உள்ளன.
கழிவு நீர் சாக்கடை நீர் என இல்லாமல் இந்த வகை வைரஸ்கள் நல்ல நீரில்தான் உருவாகும். எகிப்தில்தான் முதன்முதலில் நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் எகிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. எகிப்தின் அலெக்சாண்டிரியா மற்றும் கைரோ நகரங்களை ஒருகாலத்தில் இந்தக் கொசுக்கள் தலைகீழாக்கியதாக வரலாறு உண்டு. இவை மூன்று வாரங்களுக்கு மேல் உயிர் வாழும். பகல் நேரங்களில் கடிக்கும். காலில் வெள்ளை நிறப் புள்ளிகளுடன் இவை மாற்ற கொசுக்களில் இருந்து மாறுபட்டிருக்கும். நீர் தேங்கி நிற்கும் எதிலும் இந்த வகை கிருமிகள் உருவாக வாய்ப்பு உண்டு. வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் கிடக்கும் தேங்காய் மூடி, காலி டப்பா அல்லது தண்ணீர் தேங்கக் கூடிய ஏதேனும் உபயோகமற்றப் பொருட்கள், சரியாக மூடப்படாத தொட்டிகள், போன்றவற்றில் இவை முட்டையிடுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ள ஒருவரைக் கடித்துவிட்டு மற்றவரைக் கடிப்பதிலிருந்து காய்ச்சல் பரவுகின்றன. கொரோனா போன்ற மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களுக்கு மனிதர் நேரடித் தொடர்பால் பரவாது. கொசுக்கள் உருவாகும் இடத்தைச் சரிவரப் பராமரித்து நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதே இதற்கான ஃபர்ஸ் எய்ட்.
நோய் வந்தால், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்புகளில் வலி போன்றவை அதற்கான அறிகுறிகள். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது மட்டுமே இதற்கான சரியான தீர்வு.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )