Camphor : கணுக்கால் வெடிப்பு முதல் சரும பிரச்சனைக்குத் தீர்வு காணும் கற்பூரம்.! எப்படி பயன்படுத்துவது?
எண்ணெய் சூடானதும் இறக்கி வைத்துவிட்டு, கற்பூரத்தை உள்ளே போட்டதும் மிதமான சூட்டில் தலை, கழுத்து, கை, கால்களில் நன்றாக தேய்த்துவிட்டால் சளி மற்றும் இருமலைக்குணப்படுத்த உதவியாக உள்ளது.
கற்பூரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியின் பண்புகள் அதிகம் உள்ளதால் கணுக்கால் வெடிப்பு முதல் சரும பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது.
இந்துக்களின் புனிதப்பொருள்களில் ஒன்றான கற்பூரம், தெய்வத்திற்கு உகந்ததாக மட்டுமில்லாமல் பல்வேறு நோய்களைத்தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. குறிப்பாக கற்பூரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியின் பண்புகள் அதிகளவில் உள்ளது. எனவே கற்பூரத்தை பல நோய்களுக்குத் தீர்வாகப் பயன்படுத்தலாம் எனக்கூறப்படும் நிலையில் என்னென்ன மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ளது என இங்கே தெரிந்துக்கொள்வோம்.
முகப்பரு பிரச்சனை: முகப்பருக்கள் பொதுவாக ஹார்மோன் மற்றும் பிற எண்ணெய் சருமம் ,அழுக்கு போன்றவற்றால் ஏற்படுகிறது. இதனால் முகத்தின் அழகு பாழாகிவிடும் என்ற கவலையில் இருப்பார்கள். எனவே இதனைச் சரி செய்வதற்கு கற்பூரம் மற்றும் எலுமிச்சை கலந்து பேஸ்ட் செய்து முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பரு பிரச்சனை சரியாகிவிடும்.
தீக்காயம் குணமாக்க: கை எரிச்சல் மற்றும் தீக்காயங்களைக்குணப்படுத்துவதற்கு கற்பூரத்தில் ஒரு பேஸ்ட் அல்லது கிரீம் செய்து காயம் பட்டஇடத்தில் தேய்த்தால் குணமாகிவிடும்.
குதிகால் வெடிப்பு: குதிகால் வெடிப்பினைச்சரிசெய்வதற்கு கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். கற்பூரத்தை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து வெடிப்பு உள்ள கணுக்காலில் தடவினால் இந்தப் பிரச்சனைகள் இனி வர வாய்ப்பில்லை.
படர்தாமரை: ஆண்கள் மற்றும் பெண்கள் என அரிப்பு யாரையும் விட்டு வைப்பதில்லை. எனவே இதுப்போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனில், முதலில் கற்பூரத்தை அரைத்து கிராம்பு அல்லது மிளகுக்கீரை எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதனையடுத்து தினமும் இரவில் தூங்கும் போது இந்த பேஸ்ட்டை படர்தாமரை உள்ள இடத்தில் மீது தடவ வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது சிறிது நேரத்தில் படர்தாமரை குணமாகும் எனக்கூறப்படுகிறது.
சளி மற்றும் இருமலைக் குணமாக்கும்:
கற்பூரம் சினமொன் கம்போரா என்ற மரத்திலிருந்து கிடைப்பதால், வலி நிவாரணி மற்றும் சளி மருந்துகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாராக இருந்தாலும் சளித்தொல்லையால் அவதிப்பட்டால், முதலில் தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்து சூடு செய்ய வேண்டும். எண்ணெய் சூடானதும் இறக்கி வைத்துவிட்டு, கற்பூரத்தை உள்ளே போட்டதும் மிதமான சூட்டில் தலை, கழுத்து, கை, கால்களில் நன்றாகத் தேய்த்து விட்டால் சளி மற்றும் இருமலைக்குணப்படுத்த உதவியாக உள்ளது.
மேலும் சளி மற்றும் இருமல் சிகிச்சைக்கு உதவுவதோடு தொண்டையில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யவும் கற்பூரம் உதவியாக உள்ளது. இதோடு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சருமத்தில் ஏற்படும் எரிச்சலைக் குணப்படுத்த கற்பூரத்தை இனி பயன்படுத்த தொடங்குங்கள்..