Gut Health: சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? குடல் ஆரோக்கியத்தை கவனிங்க - நிபுணர்கள் பரிந்துரை!
Gut Health: சரும ஆரோக்கியம் குறித்து நிபுணர்களின் பரிந்துரைகளை காணலாம்.
சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைபவர்கள் டயட்டில் எண்ணெய் அதிகம் நிறைந்த உணவுகள், ஜங்க் உள்ளிட்டவைகளை சாப்பிடுவதை தவிர்க்கும் வழக்கம் உண்டு. ஆனால், உண்மையில் குடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் பிரதிபலிப்பு சருமத்தில் தெரியும்.
சரும் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பதாக மருத்துவர் கரன் தெரிவிக்கிறார். இது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கையில்,” சருமத்தை பாதுக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஏற்றவாறு உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும். குடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேணுடும். தக்காளி, கேரட், குடைமிளகாஉ உள்ளிட்டவை சருமத்திற்கு நல்லது. சில உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்ட்ரீயாக்கள் செயல்பாடுகளுக்கு உதவும்.” என்கிறார்.
View this post on Instagram
மாசற்ற சருமம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். இது மரபணு தொடர்பானது. எதை சரிசெய்ய முடியுமோ அவற்றை மட்டுமே உணவுமுறைகளால் மாற்ற முடியும்.
Prebiotics அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இது நல்ல பாக்ட்ரீயாக்கள் வளரவும் திறனுடன் செயம்பட்வும் உதவும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் செயல்பாட்டிற்கும் உதவும் என்பதால் ஆண்டி - இன்ஃப்ளமேட்ரி பண்புகள் அதிகரிக்க செய்யும். வைட்டமின் ஏ,சி, இ உள்ளிட்டவைகள் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
குடல் / செரிமான மண்டலம் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவைகள்
- பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.
- இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது நல்லது.
- புரோபயாடிக் உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- உணவில் போதுமான நார்ச்சத்துக்களை, குறிப்பாக தாவர வகை நார்ச்சத்து இருப்பது நல்லது.
- செரிமான மண்டலம் சீராக செயல்பட சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
- இஞ்சி, சீரகம், கொத்தமல்லி மற்றும் லவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது செரிமான திறனை மேம்படுத்த உதவும்.
- உணவு சாப்பிடும் முன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை ராக் சால்ட், இஞ்சி, கலந்து தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது.
- உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மென்று சாப்பிடுவதும் உணவை ஜீரணிக்க உதவுகிறது.
- காலை உணவு மிக முக்கியமான உணவு. மேலும், இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.