சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கியமான காலை உணவு ரெசிபி இதோ!
சர்க்கரை நோயாளிகள், டயட் என்றாலே அதில் கோதுமை இல்லாமல் இருக்காது. கோதுமை தோசை, கோதுமை அடை , கோதுமை ரவா உப்புமா, கோதுமை ரவா கிச்சடி, இப்படி பல வகைகள் இருந்தாலும்...
சர்க்கரை நோயாளிகள், டயட் என்றாலே அதில் கோதுமை இல்லாமல் இருக்காது. கோதுமை தோசை, கோதுமை அடை , கோதுமை ரவா உப்புமா, கோதுமை ரவா கிச்சடி, இப்படி பல வகைகள் இருந்தாலும், கோதுமை ரவா உடன் காய்கள் சேர்த்து சால்ட் செய்து சாப்பிட்டு பாருங்கள் . டேஸ்ட் ஆகவும், கலோரி குறைவாகவும், வயிறு நிறைவாகவும், உடல் எடை அதிகமாகாமல், ஊட்டச்சத்து நிறைந்தும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் இந்த கோதுமை ரவா சாலட் ரெசிபி இதோ
கோதுமை ரவா சாலட் செய்ய தேவையான பொருள்கள்
கோதுமை ரவா - 1/4 கப்
வெங்காயம்- 1
வெள்ளரிக்காய் - 1
குடைமிளகாய் - 1
ப்ரோக்கோலி - பாதியளவு
தக்காளி - 1
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 3 பல்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு - 9
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- கோதுமை ரவா நன்றாக கழிவு சிறிது நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். உதிரியாக பதம் வரும் வரை வேக வைத்தல் போதுமானது
- வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் அனைத்தையும் சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லி இலைகளை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- ப்ரோக்கோலியை கொஞ்சம் பெரியதாக வெட்டி கொள்ளவும்.
- ஒரு கடாயில், ஆலிவ் ஆயில் ஊற்றி அதில், வெங்காயம், குடைமிளகாய் ப்ரோக்கோலி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
- வேகவைத்த கோதுமை ரவா, வதக்கிய காய்கள், வெள்ளரிக்காய் ,உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு சிறிய பவுலில் போட்டு வறுத்த பாதம் பருப்பை சிறிதாக நறுக்கி மேலே தூவி பரிமாறலாம்.
கோதுமை ரவா சாலட் தயார்
இதை யாரெல்லாம் எடுத்து கொள்ளலாம்
சர்க்கரை நோயாளிகள், எப்போதும் சாப்பிடும் உணவில் இருந்து சிறிய மாறுதலாகவும், சுவை மிக்கதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
உடல் பருமன் பிரச்சனையால் அவதி படுபவர்கள், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், ஒரு வேலை உணவாக இந்த சாலட் செய்து சாப்பிடலாம்.
இது நார்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், மலசிக்கல் பிரச்சனை இருந்தால் இதை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவை தேடுபவர்களுக்கு இது சிறந்த பரிந்துரையாக இருக்கும்.