Diabetes | சர்க்கரை அளவு ரொம்ப அதிகமா? இதையெல்லாம் பண்ணா நீரிழிவு நோயைக் கண்ட்ரோல் பண்ணலாம்..
சர்க்கரை நோயாளிகள் பொதுவாக கோவக்காய் மற்றும் பாகற்காய் அதிகமாக எடுத்து கொள்வார்கள். இந்த இரண்டும் காயும் இயற்கையான முறையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பொதுவாக கோவக்காய் மற்றும் பாகற்காய் அதிகமாக எடுத்து கொள்வார்கள். இந்த இரண்டும் காயும் இயற்கையான முறையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை வியாதி வந்தாலே இந்த காய் சாப்பிடக்கூடாது, இந்த பழங்கள் சாப்பிடக்கூடாது என்ற கட்டுக்கதை அதிகமாக இருக்கிறது. ஆனால் அளவாக அனைத்து காய்களும் பழங்களும் உணவில் சேர்த்து கொள்வதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.
கேரட் - இதில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு காய் ஆகும். இதை நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளலாம். குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் குறைந்த கார்போஹைட்ரெட் கொண்ட உணவாகும். நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. இதை நீரிழிவு நோயாளிகள் அவர்களது உணவில் எடுத்து கொள்ளலாம். இயற்கையிலே இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் பச்சையாகவோ, வேகவைத்தோ சாப்பிடலாம்.
ப்ரோக்கோலி - இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு அட்டவணையில் இதை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குழாயில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.இதில் இருக்கும் சல்போராபேன் எனும் கலவை சல்போராபேன் என்சைம்களை உருவாக்குகிறது. இது இரத்த நாளங்களை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இதை சூப் ஆகவோ, வேக வைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.
கீரை - நீரிழிவு நோயாளிகள் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை சர்க்கரை நோயாளிகளும் கீரையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கீரையில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. கீரை சூப் பொரியல், கூட்டு, சாதம் என ஏதேனும் ஒரு வகையில் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவாகும். நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை அன்றாட உணவில் எடுத்து கொள்வதால்,இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. வெள்ளரிக்காயை சாலட் ஆகவோ, பச்சையாகவோ எடுத்து கொள்ளலாம்.
வெண்டைக்காய் - பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, போலிக் அமிலம், நார்ச் சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் நார்சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். வெண்டைக்காய் பச்சையாகவோ, வறுத்தோ, சுவையான குழம்பாகவோ எடுத்து கொள்ளலாம்.