இந்த 5 பழங்கள் இருந்தால் போதும்... சும்மா தகதகனு மின்னுவீங்க!
பழங்கள் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது. தினம் இரண்டு பழங்களை உணவில் எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் இருந்து கிடைக்கிறது.
பழங்கள் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது. தினம் இரண்டு பழங்களை உணவில் எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் இருந்து கிடைக்கிறது. அதே போன்று பழங்கள் சரும ஆரோக்கியத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
வாழை பழம் - இதில் வைட்டமின் பி6, சிலிக்கா, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது
வாழைப்பழம் பாதியளவு, தேன் 2 டீஸ்பூன் அளவு சேர்த்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவ வேண்டும்.
இது வெயிலில் செல்லும் போது முகத்தில் ஏற்படும் நிறம் மாறுதலை அதாவது ஹப்பர் பிக்மெண்டேஷனை அளிக்கிறது . என்னை பசை அதிகம் இருந்தால் இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கொள்ளலாம். முகத்தை இயற்கையான பொலிவுடன் வைக்க உதவுகிறது.
பப்பாளி - இதில் வைட்டமின் ஏ சத்து மற்றும் பாப்பேன் என்ற நொதி இருக்கிறது. இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. மேலும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் இந்த பழத்தில் இருக்கிறது. சில துண்டுகள் பப்பாளி எடுத்து கொண்டு அதில் தேன் சேர்த்து மசித்து கொள்ளவும். இந்த பேக் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமம் நிறம் அதிகமாவதற்கு உதவும், மேலும் முகப்பரு வராமல் தடுக்கிறது.
தக்காளி - தக்காளி முகத்தில் தடவினால் இளமையான வயது தெரியும். இதில் லைகோபீன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் பி. சி. மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கிறது. தக்காளி - 1, ஓட்ஸ் - 1 டீஸ்பூன் தயிர் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் மாஸ்க் போடவும். 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவவும். இது முகத்தில் வயதானால் வரும் சுருக்கம் வராமல் பாதுகாக்கிறது. சருமத்தை இளைமையாக வைக்கும்
வெள்ளரிக்காய் மற்றும் பால் - வெள்ளரிக்காய் பாதியளவு, பால் கால் கப், தேன் இரண்டு டீஸ்பூன், மற்றும் பழுப்பு சர்க்கரை 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஷ் பேக் போடவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், புத்துணர்வுடனும் வைக்கிறது. சிலருக்கு வறண்ட சருமமாக இருந்தால் இந்த பேக் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு - ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது. இது சரும ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். ஆரஞ்சு பழ தோலை காயவைத்து இதை பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழ தோலை காய வைத்து அரைத்து பொடியாக
வைத்து கொள்ள வேண்டும். இந்த ஆரஞ்சு பொடியுடன், தேன் மற்றும் தயிர் கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தில் புற ஊதா கதிர்களால் வரும் மாற்றத்தை தடுக்கிறது. இயற்கையான நிறத்திற்கு உதவும். வயதான, சருமத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையுடன் இருக்க இது உதவுகிறது.