மேலும் அறிய

Face Pack : ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தயிர்.... இனிமே கரும்புள்ளிகளுக்கும், டல்லடிக்கும் சருமத்துக்கும் டாட்டா..

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்

யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில்தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.
 
முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த முகத்தை பலரும் பெறுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பெரும்பாலும் சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.
 
இங்கு அதுபோன்ற சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.
 
பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு
 
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.
 
ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்
 
ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
 
Face Pack : ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தயிர்.... இனிமே கரும்புள்ளிகளுக்கும், டல்லடிக்கும் சருமத்துக்கும் டாட்டா..
 
உருளைக்கிழங்கு
 
எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.
 
துளசி
 
துளசியில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
Face Pack : ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தயிர்.... இனிமே கரும்புள்ளிகளுக்கும், டல்லடிக்கும் சருமத்துக்கும் டாட்டா..
 
குங்குமப்பூ
 
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.
 
மஞ்சள் மற்றும் தக்காளி
 
மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.
 
Face Pack : ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தயிர்.... இனிமே கரும்புள்ளிகளுக்கும், டல்லடிக்கும் சருமத்துக்கும் டாட்டா..
 
பாதாம் எண்ணெய்
 
பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.
 
கடலை மாவு
 
கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
 
Face Pack : ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தயிர்.... இனிமே கரும்புள்ளிகளுக்கும், டல்லடிக்கும் சருமத்துக்கும் டாட்டா..
 
புதினா
 
புதினாவில் புத்துணர்ச்சியூட்டும்தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
வாழைப்பழ ஃபேஸ் பேக்
 
வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.
 
Face Pack : ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தயிர்.... இனிமே கரும்புள்ளிகளுக்கும், டல்லடிக்கும் சருமத்துக்கும் டாட்டா..
சந்தன மாஸ்க்
 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் இந்த மாஸ்க் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.அப்புறம் என்னங்க டிப்ஸ்களை டிரை பண்ணி ரிசல்ட பாத்துடுங்க...
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget