சோடா பிரியரா நீங்கள்? பக்க விளைவுகள் எச்சரிக்கை!
சோடாவில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இந்த சர்க்கரை உடலில் சேர்ந்து நீரிழுவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை தருகிறது. சோடா அதிக கலோரி நிறைந்த பானமாகும்.
சோடா இன்று பிரிக்க முடியாத உணவாக மாறி இருக்கிறது. ரெஸ்டாரெண்ட் சென்று சாப்பிட்டாலே கடைசியாக ஆர்டர் செய்யும் உணவாக சோடா இருக்கிறது. தண்ணீர் தாகம் எடுத்தால் கூட சோடா தான் முதலில் குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இளைஞர்கள் பெரும்பாலோனோர் விரும்பி குடிக்கும் பானமாக சோடா இருந்து வருகிறது. இந்த சோடா எடுத்து கொள்வதால் உடலுக்கு பல்வேறு நோய்கள் வருகிறது. என்ன மாதிரியான பிரச்ச்னைகள் வருகிறது என தெரிந்து கொள்ளலாம்.
சோடாவில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இந்த சர்க்கரை உடலில் சேர்ந்து நீரிழுவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை தருகிறது. சோடா அதிக கலோரி நிறைந்த பானமாகும். இது தினம் எடுத்து கொள்ளும் போது எடுத்து கொண்ட கலோரிகளை பயன்படுத்துவதற்கு தகுந்தாற் போல் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சிகள் செய்யும் போது கலோரிகள் பயன்படுத்த பட்டு விடும். மேலும், இதில் இருக்கும் சர்க்கரை , உடலின் செயல்திறனை மாற்றி விடுகிறது.
பல்வேறு வண்ணங்கள் மற்றும் ருசிகளில் சோடா கிடைக்கிறது. நிறத்திற்கும், ருசிக்கும் அதில் வேதியல் பொருள்கள் சேர்க்கப்படுகிறது. இது மிகவும், ஆபத்தானதாக இருக்கிறது. சோடா குடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பெரிய அளவில் மாற்றம் தெரிய வில்லை என்றாலும், நாளடைவில் இது புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களில் சேமிக்க பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தாக அமைத்து விடுகிறது. சில வருடங்களுக்கு கெட்டு போகாமல் இருக்கமாறு தயாரிக்க படுகிறது.
சோடா எடுத்து கொள்வதால், கழிவுகள் உடலில் அதிகமாக சேர்க்க படுகிறது. சர்க்கரை மற்றும் சோடா இரண்டும் சேர்த்து எடுத்து கொள்வதால், எலும்புகள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எலும்புகள் தேய்மானம் அடையும். எலும்புகள் வலுவிழந்து வலிகள் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்.
சோடா சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. ஒவ்வொரு உறுப்புகளிலும், ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதில் சேர்க்கப்படும் இனிப்புகள் மீண்டும் மீண்டும் அதை எடுத்து கொள்ள வேண்டும், என்று ஒரு வித உணர்ச்சியை ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. ஒரு வித ருசிக்காக அடிமை படுத்தும் விதமாக இருக்கிறது.
இது இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி, இதய நோய்களை ஏற்படுத்துகிறது. சோடாவில் இருக்கும் சர்க்கரை பற்களையும் ஈறுகளையும் பாதிக்கிறது.
இது குறைவாக எடுத்து கொண்டாலே நீண்ட நேரத்திற்கு பசியின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மாலை மற்றும் இரவில் எடுத்து கொண்டால் இது தூக்கமின்மை பிரச்சனை வரும்.
சோடா எடுத்து கொள்வது தண்ணீர் உடன் சேராது.சோடா தண்ணீர் போன்று இருந்தாலும், இது எடுத்து கொள்வதால், உடலுக்கு தேவையான தண்ணீர் சத்து கிடைக்காது. இது வறட்சியை ஏற்படுத்தும்.
இது போன்று பல்வேறு பிரச்சனைகள் சோடா குடிப்பதால் வரும். அடுத்த முறை சோடா எடுத்து கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும்