Tulsi Water: தினமும் துளசி தண்ணீர் குடிப்பது நல்லதா? தெரிஞ்சிக்கோங்க!
Tulsi Water: துளசியில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி காணலாம்.
துளசி ஏராளமான மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளதாக ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது. சளி, இருமல், சுவாசப் பிரச்சனை தீர்க்க துளசி மருத்து கொடுக்கப்படும். அப்படி நன்மைகள் நிறைந்த துளசி நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதில் உள்ள நன்மைகளை காணலாம்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காஃபி உள்ளிட்டவற்றை குடிக்க கூடாது என்று பரிந்துரைக்கிறது மருத்துவ உலகம். எழுந்ததும் பெரிய டம்பளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வெறும் வயிற்ற்சில் சில மூலிகை பொருட்கள் சேர்த்த தண்ணீரை குடிக்கலாம்.
வெறும் வயிற்றில் துளசி நீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
துளசியின் இலை,தண்டு, பூக்கள், வேர் உள்ளிட்ட செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. காலையில் வெறும் வயிற்ற்சில் துளசி நீரை ஒரு மாதம் வரை குடித்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
சளி, இருமல், தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். இதோடு தேன் கலந்தும் சாப்பிடலாம். இது சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
துளசி நீ குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்தற்கு மிகவும் நல்லது. சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் இந்த நீரை அருந்தலாம். இயற்கையா கரைய உதவும்.
துளசி நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக இருக்க உதவும்.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
துளசியில் யூஜெனால் என்ற அத்தியாவசிய எண்ணெய் உள்ளது, இது மூட்டுகள் மற்றும் செரிமான மண்டலத்தில் அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கு பெயர் பெற்றது. இம்மூலிகை ஒரு லேசான டையூரிடிக் மற்றும் ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றத்தால் நிறைந்துள்ளது. ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது என்றும் சொல்லப்படுகின்றது
இதில் வைட்டமின் சி உள்ளது. இதய பாதிப்புகளிலிருந்து பாதுக்காக்க உதவும்.
துளசி-இஞ்சி பானம் தயாரிப்பது எப்படி?
ஐந்து முதல் ஆறு ஃப்ரெஷ்ஷான துளசி இலைகள் மற்றும் ஒரு அங்குல துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து, அது பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சுவைக்காக நீங்கள் இதனுடன் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை உங்கள் காலை உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பானத்தை அளவோடு குடிப்பது நல்லது.
காலை வேளையில் ஐந்து முதல் ஆறு துளசி இலைகளை தண்ணீருடன் உட்கொள்வது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்" என்று சொல்லப்படுகிறது. இது, கலோரிகளை எரிப்பதற்கும், இயற்கையாகவே நச்சுகளை அகற்றுவதற்கும் உதவுகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.