Tamilnadu Spots : கோயம்புத்தூர் முதல் முதுமலை வரை.. ஒரு அட்வென்ச்சர் ட்ரிப் போகணுமா? தமிழ்நாட்டில் சூப்பர் இடங்கள் இவை..
Tamilnadu tourist attractions: தமிழ்நாட்டின் திரில்லிங் இடங்கள் ஒவ்வொன்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து செல்லும். சாகசங்கள் நிறைந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Tamilnadu Thrilling places: மவுண்டன் பைக்கிங், கடற்கரையில் சர்ஃபிங், ஜங்கிள் ட்ரெக்கிங் - சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் தமிழ்நாடு
உலகெங்கிலும் இருக்கும் சுற்றுலா பயணிகளின் மிகவும் விருப்பமான இடம் தமிழ்நாடு. இதற்கு முக்கியமான காரணம் இங்கிருக்கும் உலக புகழ் பெற்ற கடற்கரைகள், தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நாட்டின் பழமையான மற்றும் பாரம்பரியமான கட்டிடக்கலை மற்றும் பல. இது தான் தமிழ்நாடு உலகளவில் பிரபலமாக இருப்பதற்கான காரணம். இந்த விடுமுறையை நீங்கள் தமிழ்நாட்டில் கழிக்க விரும்பினால் உங்களுக்காக ஒரு விருந்தையே அள்ளிக்கொடுக்க தயாராக உள்ளது தமிழ்நாடு. நீங்கள் அவசியமாக தமிழ்நாட்டில் உள்ள சில இடங்களை பார்வை இட வேண்டும். அவை உங்களுக்காக:
மெட்ராஸ் முதலை வங்கி, சென்னை:
சென்னை உள்ள இந்த க்ரோக்கடைல் வங்கி மிகவும் பழைமைவாய்ந்தது மற்றுமின்றி மிகவும் பிரபலமானது. உங்களுக்கு இங்கே ஒரு ஆச்சரியம் உள்ளது. நீங்கள் இந்த க்ரோக்கடைல் வங்கியில் ஊர்வன ஒன்றை தத்தெடுக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இதில் இருக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உங்கள் அதை தொடவும் முடியாது அல்லது வீட்டிற்கு எடுத்து செல்லவும் முடியாது. ஆனால் இதன் மூலம் நீங்கள் விரும்பும் போதெல்லாம் மெட்ராஸ் முதலை வங்கிக்குச் செல்ல முடியும்.
முதுமலையில் ஜங்கிள் ட்ரெக்கிங்:
மலையில் ட்ரெக்கிங் செய்வது என்பது பொதுவானது ஆனால் காட்டில் ட்ரெக்கிங் செய்வது என்பது ஒரு புதுமையான விஷயம். அந்த வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது தமிழ்நாடு. ஆம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நீலகிரியில் உள்ள முதுமலை வனவிலங்கு சரணாலயம் தான் உங்களுக்கு இந்த அறிய வாய்ப்பான காட்டில் ட்ரெக்கிங் செய்ய அனுமதிக்கிறது. பசுமையான காடுகளின் வழியாக மலையேறும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது புலிகள், சிறுத்தைகள் மற்றும் யானைகளின் இருப்பிடமாக இருப்பதால் இங்கு பயணிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
கோவளம் கடற்கரையில் சர்ஃபிங்:
கடலில் சர்ஃபிங் செய்ய விருப்பம் உள்ளவரா நீங்கள் அப்போ அந்த வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது கோவளம் கடற்கரை. இது தமிழ்நாட்டில் நீங்கள் அனுபவிக்க கூடிய சிறந்த சாகசமாகும். பல ஆண்டுகளாக கோவளத்தில் சர்ஃபிங் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகளவில் உள்ள பார்வையாளர்களை இது கவர்ந்து ஈர்த்துள்ளது. மேலும் இந்த சர்ஃபிங் திருவிழாவிற்கு செல்லும் போது நீங்கள் உங்களுடைய சர்ஃபிங் போர்டை எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை.
உட்புறமாக பாறை ஏறுதல் :
கோயம்புத்தூரில் NALS Climbing Wallல் முன்பதிவு செய்து நீங்கள் உட்புறமாக பாறை இருதலை அனுபவிக்கலாம்.
மவுண்டன் பைக்கிங்:
பைக் பிரியர்களுக்கு சரியான தேர்வு ஊட்டியில் உள்ள மவுண்டன் பைக்கிங். இது ஒரு வேடிக்கையான சாகசம். செங்குத்தான வளைவுகள், கடினமான சாய்வுகளில் பைக் ஓட்டுவது ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை தரும். சுற்றுலா பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்துவதற்காகத்தான் இந்த மவுண்டன் பைக் பூங்கா திறக்கப்பட்டது.