வளரும் குழந்தைகள் எடுத்து கொள்ள வேண்டிய 5 சூப்பர் உணவுகள்!
மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுகிறது. வளரும் குழந்தைகளின் வளர் சிதை மாற்றம் நன்றாக இருக்கும்.
இன்று வளரும் குழந்தைகள் அதிகமானோர் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தவிர்த்து மற்ற உணவுகளை எடுத்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் வளர்ச்சியில் பெரிய மாற்றம் நிகழ்கிறது. மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுகிறது. வளரும் குழந்தைகளின் வளர் சிதை மாற்றம் நன்றாக இருக்கும். உண்ணும் உணவில் இருந்து கலோரிகள் ஊட்டச்சத்துகள் பிரித்து எடுத்து கொண்டு, முழுமையாக பயன்படுத்தபடும். இது தான் வளர் சிதை மாற்றம். நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டால்தான் வளர்ச்சி முழுமையாக இருக்கும்.
புரதம் - உணவில் புரத சத்து மிக்க மீன், முட்டை, பால், தயிர் , சீஸ் , சோயா அனைத்தும் சேர்த்து இருக்க வேண்டும். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்புகள் மற்றும் தசைகள் வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
இரும்பு சத்து - சிவப்பு இறைச்சி, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், மத்தி மீன், முட்டை, பருப்பு ஆகியவற்றில் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. மேலும் பச்சை காய்கறிகள்,பழங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அளிக்கும். இது இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்து கொள்ள உதவும். ஒவ்வொரு நாளும், கீரை பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி - இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது, சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். குழந்தைகள் விளையாடும் போது அடிக்கடி காயம் அடைகின்றனர். அதனால் வரும் இரத்த இழப்பு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வைட்டமின் சி சிறந்த மருந்தாகும். ஆரஞ்சு, எலுமிச்சை, இனிப்பு சுண்ணாம்பு, திராட்சைப்பழம் ஆகியவை வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் .
வைட்டமின் டி - குழந்தை பிறந்ததில் இருந்து தினம் ஒரு 20- 30 நிமிடங்கள் வெயிலில் நிற்பது அவசியம். இது உடலுக்கு தேவையாக வைட்டமின் டி சத்து கிடைக்க உதவும். வைட்டமின் டி சத்தானது எலும்புகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புகளை வலுப்படுத்தவும், உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவும்.குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதியுங்கள். அப்போது தான் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்கும்.
ஆரோக்கியமான கொழுப்பு - சரியான அளவு ஆரோக்கியமான கொழுப்பு எடுத்து கொள்வது, மூளை வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்கவும். உதவும். ஆரோக்கியமான கொழுப்பு , உளர் பழங்கள், எண்ணெய் ஆகிய வற்றில் உள்ளது. அதனால் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
மேலும் குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுத்து பழக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு உடல் வெப்ப நிலையை சீராக வைக்கவும், உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும் உதவியாக இருக்கும்.