மேலும் அறிய

Curd : தயிர், பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு சாறு.. உங்க ஃபேஷியல் ரிசல்ட்டை நீங்களே பாருங்க..

தயிர் 48 மணிநேரம் வரை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் அதேவேளை குளிர்காலத்தில், சரும வறட்சியைப் போக்குகிறது.

பொதுவாக சரும பராமரிப்பிற்கென ஆண்களும் பெண்களும் இன்றைய காலகட்டத்தில் நிறைய செலவு செய்கிறார்கள். அழகு சாதன பொருட்கள் வாங்குவது மற்றும் ஸ்பா சென்டர்களுக்கு செல்வது என தங்களை அழகுபடுத்திக் கொள்ள நிறைய பணத்தை இங்கெல்லாம் செலவிடுகிறார்கள். இப்படி தங்கள் முகப்பொலிவிற்கும், சரும பராமரிப்பிற்கும் பணத்தை செலவிடுவது ஒரு பக்கம் என்றால், மற்றொருபுறம், அழகு சாதனப் பொருட்களில் கலந்து இருக்கும் செயற்கை ரசாயன பொருட்கள் நாளடைவில் சருமத்திற்கு தேவையில்லாத எதிர் வினைகளை  தருகிறது

ஆனால், நம் வீடுகளில் கிடைக்கும் இயற்கையான ஒரு உணவுப்பொருளைக் கொண்டு,இயற்கை மாய்ஸ்சரைசர் ஆக பயன்படுத்தலாம்.
தயிர் உணவுக்கு மட்டுமல்ல,பல வகையான சருமப் பிரச்னைகளுக்கும் உதவக் கூடியது. அந்த வகையில் தயிர் பயன்படுத்தி ஃபேஸ் பேக் அப்ளை செய்வதை பற்றி காண்போம்.

இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தயிர் எடுத்து,முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகப்பருக்கள், தோல் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். மேலும் தோலில் காணப்படும் வறண்ட தன்மை நீங்கி  எண்ணெய் பசையுடன்  விளங்கும். தயிரை இவ்வாறு நேரடியாக தோல்களில் பயன்படுத்துவதன் மூலம்,தோலில் இருக்கும் கருமையான திட்டங்கள் அறவே நீங்குகிறது.

சாதாரண லோஷன் சருமத்தை 12 முதல் 24 மணி நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது போல, தயிர் 48 மணிநேரம் வரை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில், சரும வறட்சியைப் போக்க  தயிரைப் பயன்படுத்துவது சிறந்தது. தயிரை பயன்படுத்துவதன் மூலம் மிருதுவான மென்மையான ஈரப்பதத்துடன் கூடிய சருமத்தை  பெற முடியும்.

தயிருடன் நிறைய பொருட்களை கலந்து ஃபேஸ்பேக் ஆகவும் உடல் முழுவதும் பயன்படுத்தி சிறப்பான பலன்களை பெறலாம்.

தயிர், வாழைப்பழம், ரோஸ் வாட்டர் மூன்றும் கலந்து முகத்தில் தேய்த்தால் உங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். இதனை ஒரு பேஸ்ட் போல் தயாரித்து முகம்  மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளலாம். இதனை தினமும் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்தால் முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைப்பதை உங்களால் உணர முடியும். சருமம் மென்மையாக இருப்பதற்கும் இது பயன்படுகிறது. முகமானது பளிச்சென்று மாறுவதற்கு, சிறிது தயிருடன் தக்காளியை நன்கு அரைத்து பேஸ் பேக் போல முகத்தில் போட்டு,20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால்,பளிச்சென்று முகம்மது மாறுகிறது.

இதே போல சிறிதளவு பப்பாளியுடன் தயிரை நன்றாக கலந்து முகத்திலும் உடல் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி இதே போல தொடர்ந்து செய்து வர அழகாகவும் பளிச்சென்று மாறுகிறது. வாரத்திற்கு ஒருமுறை,ஊற வைத்த வெந்தயத்தை விழுதாக அரைத்து, தயிருடன் நன்றாக கலந்து, முகத்தில் இட்டு,அரை மணிநேரம், கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, பொலிவிழந்து காணப்படும் முகம், பொலிவோடும் அழகாகவும் காட்சியளிக்கும்.

எலுமிச்சை சாற்றுடன் தயிறை கலந்து, உடல் முழுவதும் பூசி அரை மணிநேரம் கழித்து குளித்து வர, உடம்பில் ஆங்காங்கே,கருமையாக காணப்படும் திட்டுக்கள் நீங்கி சருமமானது புது பொலிவு பெறும். இவ்வாறு செலவுகள் இல்லாமல், இயற்கையான முறையில், வீட்டில் கிடைக்கக்கூடிய தயிரை கொண்டு,  சருமத்தை ஈரப்பதத்துடனும் பொலிவுடனும்.பளிச்சென்றும் வைத்திருங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Embed widget