காலை எழுந்ததும் சோம்பலா இருக்கா.? - உங்கள் தினத்தை உற்சாகத்துடன் தொடங்க சில டிப்ஸ்!
காலை எழுந்தவுடனே மொபைலை ஸ்க்ரால் செய்வது நம்மில் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
காலை சிறப்பாக இருந்தால் அந்த நாள் முழுவது கூடுதல் உறச்சாகத்தை கொடுக்கும் . அப்படியாக உங்கள் நாளை உற்சாகத்துடன் தொடங்க சில டிப்ஸ் !
நிலையான படுக்கும் நேரம் , விழிக்கும் நேரம் :
தூக்கம் என்பது அடுத்த நாளின் தொடக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 8 மணி நேர இடையூரற்ற தூக்கம் என்பது அடுத்த நாளுக்கான அதிக சக்தியை கொடுக்கிறது. முதலில் உங்கள் தூக்க நேரத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் . இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கினால் காலை 6 அல்லது அதிகபட்சம் 7 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும்.
திட்டமிடல் :
திட்டமிடல் என்பது உங்கள் காலையை டென்ஷன் ஃபிரீயாக மாற்றும். காலை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும் , எவ்வளவு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பது குறித்து சரியாக திட்டமிடுங்கள் .அதற்கு ஏற்ற மாதிரியாக தூங்குவதையும் , விழிப்பதையும் வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
படுக்கையில் இருந்து உடனடியாக எழுந்திருக்க வேண்டும் :
காலை எழுந்தவுடனே மொபைலை ஸ்க்ரால் செய்வது நம்மில் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அவ்வாறு செய்யாமல் உடனடியாக படுக்கையில் இருந்து எழுந்துருக்க வேண்டும் . அதன் பிறகு காலை கடமைகளான பிராத்தனை , பல் துலக்குதல் , உடற்பயிற்சி , யோகா போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும்.
மொபைல்ஃபோனை தவிர்க்கவும் :
உறங்குவதற்கு முன்னதாக படுக்கையில் சில மணி நேரம் மொபைலை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால் , உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். இது உங்களது உறக்கத்தை மட்டுமல்லாம அடுத்த நாளுக்கு தேவையான செயல் திறனையும் குறைத்து விடுகிறது.
தண்ணீருடன் தொடங்குங்கள் :
காலை பொழுதை ஒரு தேநீர் அல்லது காஃபியுடன் தொடங்குவதை விட தண்ணீருடன் தொடங்குவது கூடுதல் எனர்ஜியை கொடுக்கும் என்கின்றனர் ஆயவாளர்கள் . உங்கள் படுக்கைக்கு அருகில் தண்ணீரை வைத்துக் கொள்ளவும், நீங்கள் எழுந்தவுடன் எட்டு அவுன்ஸ் குடிக்கவும் பரிந்துரைக்கிறாரகள். தண்ணீர் இன்றியமையாதது, ஏனென்றால் நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடல் ஜீரணிக்க உதவுகிறது, அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, கழிவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது.
உடற்பயிற்சி :
காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்வது உங்களது உடலுக்கு மட்டுமல்லாமல் , மனதிற்கு நன்மை பயக்கும்.உடற்பயிற்சி செய்வது உங்களின் தூக்கம்-விழிப்பு இரண்டின் சுழற்சியை சீராக்க உதவும், அதுவே வழக்கமாக இருந்தால் எடை குறைக்கவும் உதவும். முழு வொர்க்அவுட்டிற்கும் உங்களுக்கு நேரம் இல்லையென்றால், உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை அடுத்த நாளுக்கு தயார் படுத்த சில ஸ்ட்ரெச்சர்ஸ் வொர்க் அவுட்டை செய்யலாம்
உணவு :
காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள் , நேரத்திற்கு சாப்பிடுவது உங்களது இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்தும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஏதாவது சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எனர்ஜி அளிக்குமாம். ஒரு சிறிய ஆப்பிள் அல்லது அரை வாழைப்பழத்தை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சியை தொடங்குங்கள்