மேலும் அறிய

Mental health: மனமே! நீ நலமா?மன அழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியம் மட்டுமெ முதன்மையானது அல்ல. மனமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். மன ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க என்னென்ன செய்யலாம்?

இன்றைய அவர வாழ்க்கையில், அடிக்கடி, நமக்கே ‘All is well’ என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பணிச் சுமை, மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களினால், மனம் அமைதியாக இருக்கிறாதா? மகிழ்வுன் தான் இருக்கிறதா என்பதை கவனிக்க மறந்துவிடுகிறோம். உங்கள் மனம் ஆரோக்கியத்திற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

உலக சுகாதர அமைப்பின் கூற்றுப்படி, மன ஆரோக்கியம் என்பது "ஒரு தனிநபர் தனது சொந்த திறன்களை உணர்ந்து, வாழ்க்கையின் சாதாரண அழுத்தங்களைச் சமாளிக்கக்கூடிய நல்வாழ்வு நிலை என்பதுதான்.

பணி சுமை, பொருளாதார நிலை, பெரும் இழப்பு போன்ற பல காரணங்கள் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. அமெரிக்க உளவியல் சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தில், மின்னணு தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் அதிகரிப்பு காரணமாக மனநலப் பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஒருவர் அன்றாடம் மேற்கொள்ளக்கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன. உடற்பயிற்சி செய்தல், எட்டு மணிநேர தூங்குவது, ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவது, தியானம் செய்தல், எதவாது பிரச்சனை என்றால் நம்பிக்கை மிக்க நண்பர்களுடன் போன்றவை உங்கள் மன நலனைக் கவனித்துக்கொள்ளும் சில வழிகள்.

"குறைவான மன ஆரோக்கியத்தின் சில ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் குறைந்த ஆற்றல், எதிலும் ஈடுபட நாட்டம் இல்லாதது, அதிகமாக உணவு உண்பது, தூங்குவது. மனநிலை மாற்றங்கள், பயம் உணர்வு அதிகமாக இருப்பது உள்ளிடவைகளாகும்.

உங்கள் மன ஆரோக்கியத்தை நிர்வகிக்க, மனநல நிபுணர்கள் சொல்லும் பத்து வழிமுறைகள்.

உங்கள் நல்லெண்ணம் மற்றும் நல்ல செயல்களை கண்காணியுங்கள்:

அன்றாடம் உங்களின் வாழ்க்கையில் நடக்கும் மகிழ்வான நிகழ்வுகளை எழுதுகள். உங்களிடம் இருப்பவைகளை நினைவு கூறுங்கள். தாழ்வான எண்ணங்களை உங்கல் மனதில் இருந்து நீக்க இது உதவும். தினமும் நீங்கள் இந்த வாழ்க்கைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கும் மூன்று விஷயங்களைப் பட்டியலிடுங்கள்.

உடற்பயிற்சி:

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, ​​உங்கள் உடல் இருந்து என்டோர்பின்களை வெளியிடுகிறது. இதனால் உங்கள் மனம் அமைதி கொள்ளும். உங்கள் நரம்புகள் ரிலாக்ஸாக இருக்கும்.

உணவுக் கட்டுப்பாடு:

உடற்பயிற்சியுடன் சேர்த்து உணவுமுறையும் உங்களின் மன உணர்வை மாற்றும். பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மனம் ஆரோக்கியத்திற்கு உதவும்.

தியானம்:

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் சில நிமிடங்களை ஒதுக்கி உங்கள் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ள எதையும் யோசிக்காதீர்கள். சிறிது நேரம் எதையும் யோசிக்கமால் இருங்கள். தூங்கு செல்லும் முன், தியானம் மேற்கொள்வது நல்லது.

தூக்கம் முக்கியம்:

போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் மன அழுத்தம் ஏற்படும். தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். எவ்வித தொந்தரவுகள் இல்லாத தூக்கம் முக்கியம்.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்:

நீங்கள் ஏதாவது பிரச்சனையில் இருந்தால், உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ள பயப்பட வேண்டாம். உங்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்களிடன் நீங்கள் உங்கள் பிரச்சனைகளைப் பகிந்து கொள்ளலாம். மேலும், பிறரிடம் பேசுவதால் உங்கள் மனதின் பாரம் குறையும். இதன் மூலம் உங்கல் மனம் ஆறுதல் கொள்ளும்.

மனதிற்கு பிடித்ததைச் செய்யுங்கள்:

வாசிப்பு, கலை, விளையாட்டு அல்லது குறுக்கெழுத்து என உங்கள் பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் மேற்கொள்ளும் எதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றில்லை. ஓவியம் தீட்டுங்கள்.அது முற்றிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும் போதுமானது.

பிறருக்கு எதாவது செய்யுங்கள்:

உங்கள் நண்பர்கள் அல்லது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள், என யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் ஒரு வேளை உணவு தயாரித்து கொடுங்கள்.  எதையும் எதிர்பார்க்காமல் வேறொருவருக்காக நீங்கள் ஏதாவது செய்யும்போது, ​​அவர்களின் நன்றியுணர்வு உங்களை உலகத்தில் முதலிடத்தில் இருப்பதைப் போல உணர வைக்கும். மனம் அமைதி கொள்ளும். இதுதான் மகிழ்வித்து மகிழ் என்பது.

இசை எனும் மாமருந்து:

நல்ல இசைக் கேட்பது உங்கள் மனதிற்கு நல்லுணர்வை தரும். இசை உங்களை மீட்டெடுக்கும். மனதில் தையிரியத்தை வரவழைக்கும்.

உதவி கேட்க தயக்கம் வேண்டாமே:

உங்கள் மன எழுச்சிகளை உங்களால் நிர்வகிக்க முடியவில்லை என்றாலும், மன அழுத்தத்தில் இருந்தாலோ, மருத்துவரிடம், பிறரிடம் சொல்ல தயங்காதீர்கள். நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள்.

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் 104 மருத்துவ உதவி சேவையை 24 மணி நேரமும் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் தொடர்புகொள்ளலாம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget