கோவை பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய ஆசையா? அக்.18க்குள் விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்?
விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் முதலில், https://www.sacon.in/careers/ என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
கோவையில் உள்ள பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவாகத்தெரிந்துக்கொள்வோம்.
Junior Research Biologist பணிக்கான தகுதிகள்: இப்பணிக்கு 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூபாய் 31 ஆயிரம் என நிர்ணயம்.
Research Associate – I பணிக்கான தகுதிகள்: 5 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology ஆகிய பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு Ph.D முடித்திருக்க வேண்டும்.
5 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 47,000
Project Associate பணிக்கான தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech./ M.Sc./ MCA degree in Computer Science or Information Technology முடித்திருக்க வேண்டும்.
2 ஆண்டு பணி முன் அனுபவம் இருப்பது அவசியம்.
வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,000
Junior Research Biologist – II பணிக்கான தகுதிகள்:
காலிப்பணியிடம் – 9
கல்வித் தகுதி : அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
இதேப்போன்று senior Reserch biologist, project scientist, technical assistant, Nature education assistant பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் முதலில், https://www.sacon.in/careers/ என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இதோடு தேவையான அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து இதனை PDF வடிவில் மின்னஞ்சலாக அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : recruitments@sacon.in with a cc to rcsacon@gmail.com
தேர்வு செய்யும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.