Jobs: முதுகலை பட்டம் பெற்றவர்களா? தூத்துக்குடி துறைமுகத்தில் காத்திருக்குது வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?
VOC Port Recruitment: தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Jobs: முதுகலை பட்டம் பெற்றவர்களா? தூத்துக்குடி துறைமுகத்தில் காத்திருக்குது வேலை..! விண்ணப்பிப்பது எப்படி? VOC Port Trust Recruitment 2023 Senior Consultant, Professional Intern & Various Posts Jobs: முதுகலை பட்டம் பெற்றவர்களா? தூத்துக்குடி துறைமுகத்தில் காத்திருக்குது வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/e21acae4299d7092480154cf53488b601684578307109333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதித்துறை, தொடர்பியல், மனித வளம், சட்டம், ஐ.டி., சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை காணலாம்.
பணி விவரம்:
- சீனியர் கன்சல்டண்ட்
- கன்சல்டண்ட்
- அசோசியேட் கன்சல்டண்ட்
வயது வரம்பு:
- சீனியர் கன்சல்டண்ட் - 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- கன்சல்டண்ட் - இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- அசோசியேட் கன்சல்டண்ட் - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பணி காலம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர்.
ஊதிய விவரம்:
அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி தேர்வு செய்யப்படுவர்:
இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்க..
இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை காணவும்.
முகவரி:
The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Advt%20for%20Consultant%20%20Young%20Professionals.pdf
- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகமா?...அடித்து சொல்லும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)