Voc துறைமுகத்தில் வேலை: டிகிரி முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்!
வ.உ.சி துறைமுகப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் . தேர்வாகும் நபர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் காலியாக உள்ள தலைமைப் பொறியாளர் அதிகாரி பணியிடங்களுக்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியாவின் 12 முதன்மை துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம் செயல்பட்டுவருகிறது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக இத்துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி சேவை வழங்கும் துறைமுகமாக இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை 10 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக சரக்குகளை கையாண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக்கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்துறைமுகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது Chief Engineer officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிக்கான வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
VOC துறைமுகத்தில் Chief Engineer officer பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடம் :1
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சமாக 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்டப் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/11/voc-port-trust-chief-engineer-officer-post-advt-details-9a2d16.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தினை டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து வருகின்ற டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் வ.உ.சி துறைமுக முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
3b, World Trade Ave,
Harbour Estate,
Tuticorin Beach Road Salt Pans,
Thoothukudi,
Tamil Nadu 628004
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : வ.உ.சி துறைமுகப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெற்றுக்கொள்ளுங்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.