மேலும் அறிய

Job Fair : விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... எங்கு ? எப்போது தெரியுமா!

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.10. 2024 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற நபர்கள் அதிகளவு பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அலுவலக வளாகத்திலேயே சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது,

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

2024 2025ம் நிதியாண்டில் இரண்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் தற்போது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.10.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

150ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ப்பு

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.

கல்வித்தகுதி 

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு. 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இணையத்தில் முன்பதிவு 

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
 
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 05.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget