மேலும் அறிய
Job Fair: வேலைவாய்ப்பு முகாம்... 1000 பணியிடங்கள்; எங்கு ? எப்போது தெரியுமா?
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Source : ABP NADU
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற நபர்கள் அதிகளவு பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அலுவலக வளாகத்திலேயே சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது,
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
2024 2025ம் நிதியாண்டில் இரண்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் தற்போது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
200ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 200ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.
கல்வித்தகுதி
இம்முகாமில் 8 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு. 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இணையத்தில் முன்பதிவு
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 16.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
உலகம்
ஆட்டோ
Advertisement
Advertisement