மேலும் அறிய

சென்னை ஐஐடியில் உதவிப்பேராசிரியர் பணி: தகுதியுள்ள பட்டதாரிகள் டிச.2க்குள் விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்  எனவும் அதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே சென்னை ஐஐடி உதவிப்பேராசிரியர் பணிக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஐஐடியில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

 தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியாக இந்திய தொழில்நுட்பக்கழகம்  சென்னை இயங்கிவருகிறது. கடந்த 1959 ஆம் ஆண்டு மேற்கு செருமனி அரசின் பணஉதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் சென்னை ஐஐடி நிறுவப்பட்டது. மேலும் இந்திய அரசினால் தேசிய இன்றிமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தொடர்ந்து 3-வது ஆண்டாக தேர்வாகியுள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இதோடு இங்கு நல்ல அனுபவம் வாய்ந்த பேராசியர்களால் சிறப்பாக வகுப்புகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் தற்போது உதவிப்பேராசிரியர் பணிக்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.

  • சென்னை ஐஐடியில் உதவிப்பேராசிரியர் பணி: தகுதியுள்ள பட்டதாரிகள் டிச.2க்குள் விண்ணப்பிக்கவும்!

உதவிப்பேராசிரியர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 49

கல்வித்தகுதி : சென்னை ஐஐடியில் உதவிப்பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிச்.டி(Ph.D) முடித்திருக்க வேண்டும். அல்லது அதற்கு சமமாக பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்டப் பிரிவில் 3 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு -  விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: சென்னை ஐஐடியில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் www.iitm.ac.in என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் கேட்கப்பட்ட அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்திச் செய்து விண்ணப்பத்தை வருகின்ற டிசம்பர் 2 ஆம் ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்  எனவும் அதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே சென்னை ஐஐடி உதவிப்பேராசிரியர் பணிக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : மேற்கண்ட முறையில் தேர்வாகும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.70,900 முதல் ரூ. 1,01,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை ஐஐடியில் உதவிப்பேராசிரியர் பணி: தகுதியுள்ள பட்டதாரிகள் டிச.2க்குள் விண்ணப்பிக்கவும்!

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://facapp.iitm.ac.in/2021m/sites/default/files/F2021m-AP-Advertisement.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். குறிப்பாக சென்னை ஐஐடியில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் மேற்கண்ட முறைகளில் விண்ணப்பங்களை உடனடியாக ஆன்லைன் வாயிலாக அனுப்பி பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Job Fair: விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 150+ நிறுவனங்களில் வேலை பெற அரிய வாய்ப்பு
Job Fair: விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 150+ நிறுவனங்களில் வேலை பெற அரிய வாய்ப்பு
சிவகங்கை பெண்களுக்கு அரசு அலுவலகத்தில் வேலை: தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட அழைப்பு!
சிவகங்கை பெண்களுக்கு அரசு அலுவலகத்தில் வேலை: தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க! கலெக்டர் அலுவலகத்தில் சூப்பரான அரசு வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!
மிஸ் பண்ணிடாதீங்க! கலெக்டர் அலுவலகத்தில் சூப்பரான அரசு வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
Embed widget