(Source: Poll of Polls)
UPSC Recruitment: யு.பி.எஸ்.சி. பணியிடங்கள்; மாதம் ரூ.1.7 லட்சம் வரை ஊதியம்.. எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ!
UPSC Recruitment: அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 10 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- Scientist ‘B’ (Chemistry) -2
- Deputy Central Intelligence Officer (Technical) - 4
- இணை உதவி இயக்குநர் - 3
- Assistant Labour Commissioner - 1
கல்வித் தகுதி:
- Scientist ‘B’ பணிக்கு விண்ணப்பிக்க வேதியியல்,. பயோகெமிஸ்ட்ரி , Forensic Science ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Deputy Central Intelligence Officer பணிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக் மற்றும் டெலிகம்யூனிகேசன் பிரிவில் பொறியியல் பட்டம் பெறிருக்க வேண்டும் அல்லது பி.டெக் படிக்க வேண்டும்.
- இணை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக் மற்றும் டெலிகம்யூனிகேசன் பிரிவில் பொறியியல் பட்டம் பெறிருக்க வேண்டும் அல்லது பி.டெக் படிக்க வேண்டும்.
- Assistant Labour Commissioner பணிக்கு விண்ண்பிக்க சட்டம், தொழிலாளர் நலச் சட்டம், தொழில்துறை விவகாரம், Personnel Management ஆகிய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
இந்தப் பணியில் சில பதவிகளுக்கு குறைந்தபட்ச மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
ஊதிய விவரம்:
- Scientist ‘B’ (Chemistry) - ரூ.56,100-1,77,500
- Deputy Central Intelligence Officer (Technical) - ரூ.56,100-1,77,500
- Joint Assistant Director - ரூ.47,600-1,51,100
- Assistant Labour Commissioner- ரூ.56,100-1,77,500
விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும், Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/ பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு யு.பி.எஸ்.சி..-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php- என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.01.2023.
முக்கிய நாட்கள்:
இது தொடர்பான தகவல்களுக்கு https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MzA05S3ICAXQVIIXUAHOLDK79JPNXCGQCCMNK2XACWFAS1KAZAY6IL- என்ற இணைப்பை கிளிக் செய்து காணலாம்.
UPSC செயலி: அம்சங்கள் என்ன?
தேர்வு விவரங்கள், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், அவற்றுக்கான தேர்வு விவரங்கள், தேர்வு முடிவுகள், ஆள் சேர்ப்பு விவரங்கள், அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை செயலி வழியாகவே இனி மேற்கொள்ளலாம்.
இவை தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் விவரங்களும் அவற்றுக்கான இணைப்பும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செயலியைப் பதிவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.upsc.upsc