மேலும் அறிய

UPSC JE recruitment 2023: மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்; யு.பி.எஸ்.சி. வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? நாளையே கடைசி!

UPSC JE recruitment 2023: யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தினை இங்கே காணலாம்.

UPSC Recruitment 2023: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission)  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 146 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Junior Engineers, Research Officers,Assitant Directors உள்ளிட்ட  பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி. 

பணி விவரம்:

  • Junior Engineer (Electrical): 20
  • Junior Engineer (Civil): 58
  • Public Prosecutor: 48
  • Assistant Director (Regulations & Information): 16
  • Research Officer (Yoga): 1
  • Research Officer (Naturopathy): 1
  • Assistant Director (Forensic Audit): 1
  • Assistant Architect: 1

மொத்த பணியிடங்கள் - 146 

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல் பட்டம், பி.டெக்.சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், எம்.எஸ்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

யோகா பயிற்றுவிக்க 'Naturopathy and Yogic Science’ இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி இயக்குநர் பணிக்கு பட்டய கணக்கர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.

வயது வரம்பு 

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 30 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 58 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ’Pay Matrix as per 7th CPC' அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:

இதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும்,  Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/  பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு யு.பி.எஸ்.சி..-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php- என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:


UPSC JE recruitment 2023: மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்; யு.பி.எஸ்.சி. வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? நாளையே கடைசி!


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Advt-No-07-2023-engl-060423_0.pdf-என்ற இணைப்பில் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.04.2023 23:59 மணி வரை 

UPSC செயலி: அம்சங்கள் என்ன?

தேர்வு விவரங்கள், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், அவற்றுக்கான தேர்வு விவரங்கள், தேர்வு முடிவுகள், ஆள் சேர்ப்பு விவரங்கள், அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை செயலி வழியாகவே இனி மேற்கொள்ளலாம். 


UPSC JE recruitment 2023: மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம்; யு.பி.எஸ்.சி. வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? நாளையே கடைசி!

 

இவை தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் விவரங்களும் அவற்றுக்கான இணைப்பும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

செயலியைப் பதிவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.upsc.upsc - என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு முகாம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விபரம்!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget