மேலும் அறிய

Job Alert: டிகிரி படித்தவரா? திருச்சியில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Jobs Tamil: திருச்சியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

திட்ட மேலாளர்

தரவு உதவியாளர்

ஆலோசகர்

கல்வித் தகுதி

திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க BAMS / BUMS/ BSMS / BNYS துறையில் இளங்கலை படித்திருக்க வேண்டும்.

தரவு உதவியாளர் பணிக்கு பி.டெக்., பி.சி.ஏ., பி.பி.ஏ., ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

ஆலோசகர் பணிக்கு BSMS படித்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

திட்ட மேலாளர் - ரூ.30,000/-

தரவு உதவியாளர் - ரூ.15,000/-

ஆலோசகர் - ரூ.40,000/-

வயது வரம்பு விவரம்

இந்தப் பணிக்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி காலம்

இந்தப் பணி 11 மாத காலம் மட்டுமே. பணித்திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிகக்ப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு தேவையான ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

துணை இயக்குநர்

சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

ரேஸ்கோர்ஸ் ரோடு, 

ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,

டி.வி.எஸ். டோல்கேட்,

திருச்சிராப்பள்ளி - 620 020

தொலைப்பேசி எண் -0434 - 2333112

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.10.2023 மாலை 5 மணி வரை 

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

சேலத்தில் உள்ள  சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

வழக்கு பணியாளர் (Case Worker)

கல்வி மற்றும் பிற தகுதிகள்

சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.

சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேலத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

வழக்கு பணியாளர் (Case Worker) - ரூ.15,000

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,

அறை எண் 126, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 

சேலம்.

தொடர்புக்கு - 0427 - 2413213

விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.10.2023

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/09/2023093020.pdf

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget