மேலும் அறிய

TNSTC Recruitment 2023: அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணி - விண்ணப்பிக்க நாளையே கடைசி!

TNSTC Recruitment 2023: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (17.09.2023) கடைசி தேதியாகும்.

பணி விவரம்:

ஓட்டுநர் 

நடத்துனர்

கல்வி மற்றும் பிற தகுதிகள்

எட்டாம் வகுப்பு, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். 

செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2023-க்கும் முன்னர் பெற்றதாக இருக்க வேண்டும். 

ஓட்டுநர் உடன் நடத்துனர் வயது வரம்பு விவரம்

01.01.2023-ன் படி 24 பூர்த்தியாகி இருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினர், பொது வகுப்பினர் 50 வயது மிகாமல் இருக்க வேண்டும். இதர வகுப்பினர் 55 வயது மிகாமல் இருக்க வேண்டும். 

இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.

உயரம் மற்றும் எடை 

உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. எடை 50 கி.கி. 

எவ்விதமான உடல் அங்க குறைபாடு அற்றவராக இருத்தல் வேண்டும். கண் பார்வைத் திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.

கண் பார்வைத்திறன் குறைபாடு

காது கேட்கும் திறன் குறைபாடு 

இரவு நேர / நிறம் கண்டறிதலில் குறைபாடு

வளைந்த கால்கள் முழங்கால்கள் ஒட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடுகள். 

சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது. 

விண்ணப்ப கட்டணம்:

பட்டியலின/ பழங்குடியின வகுப்பினருக்கு ரூ.590 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு ரூ.1,180 கட்டணமாக செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு www.arasubus.tn.gov.in - என்ற இணையதள முகவரி இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி- 18.09.2023

இந்த வேலைவாய்ப்பிற்கா கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் குறித்த அப்டேட்களை http://www.arasubus.tn.gov.in/ - என்ற இணையதள முகவரியில் காணலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு தகவலை அறிய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள வீடியோவை காணலாம்.

****

IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை இட ஒதுக்கீடு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 20- ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

அக்னி பத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 

அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

பணி விவரம்: 

அக்னிவீர்வாயு பணியாளர்கள்

கல்வித் தகுதி: 

  • இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். 
  • வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • +2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  •  மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் வோக்கேசனல் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் 
https://indianairforce.nic.in/wp-content/uploads/2022/06/Detailed-BRIEF-13-JUN-22.pdf - தெரிந்துகொள்ளலாம். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு ர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்’

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in  -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் இதில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2023

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget