TNPSC Horticulture Notification: விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ.2. லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி; நாளையே கடைசி!
TNPSC Horticulture Notification 2023 : டி.என்.பி.எஸ்.சி. - இன் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தினை இங்கே காணலாம்.
தமிழ்நாடு வேளாண் விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (10.02.2023) கடைசி நாள்.
பணி விவரம்:
வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் - 37
வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) - 8
தோட்டக்கலை அலுவலர் - 48
மொத்த பணியிடங்கள் : 93
கல்வித் தகுதி:
- வேளாண் அலுவலர் பணிக்கு வேளாண்மை துறையில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் போதிய அளவு மொழியறிவு வேண்டும்.
- வேளாண்மை உதவி இயக்குநர் பணிக்கு Agricultural Extension அல்லது Agricultural Economics பிரிவுகளில் எம்.எஸ்.சி படித்திருக்க வேண்டும்.
- தோட்டக்கலை அலுவலர் இளங்கலை தோட்டக்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
நேர்முகத் தேர்வு உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 37 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
வேளாண்மை உதவி இயக்குநர் பணிக்கு ஏனையோர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்) - ரூ.37,700 - 1,38,500
- வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) - ரூ.56,100 - 2,05,700
- தோட்டக்கலை அலுவலர் : ரூ.37,700 - 1,38,500
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
தேர்வு கட்டணம் - ரூ.200
தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்:
ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல் / வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் குறித்து அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட்டும்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2023
இது தொடர்பான முழு விவரத்திற்கு அறிவிப்பின் https://www.tnpsc.gov.in/Document/tamil/01_2023_Agri%20and%20Horti_Tamil.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்