TNPSC Group-3A: தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது குரூப்-3 ஏ தேர்வு - 15 இடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி
கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-3 ஏ தேர்வானது 331 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-3 ஏ தேர்வானது 331 மையங்களில் தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 1 லட்சம் பேர் எழுதி வருகின்றனர்.
குரூப் 3 ஏ:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பானது, டிசம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆகிய பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
15 மாவட்டங்களில் தேர்வு:
எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்பொழுது பதினைந்து (15) மாவட்டங்களில் 331 தேர்வு மையங்களில் மட்டுமே, மேற்குறிப்பிட்ட தேர்வு இன்று நடைபெறுகிறது.
| வ. எண் | அறிவிக்கையில் குறிப்பிட்டிருந்த தேர்வு மையங்கள் | |
| 1. | சென்னை | சென்னை (0101)
|
| 2. | திருவள்ளூர்
| சென்னை (0101) |
| 3. | மதுரை
| மதுரை (1001)
|
| 4. | தேனி
| மதுரை (1001) |
| 5. | விருதுநகர்.
| மதுரை (1001) |
| 6. | திண்டுக்கல்
| மதுரை (1001) |
| 7. | கடலூர்
| கடலூர் (0301) |
| 8. | விழுப்புரம் | கடலூர் (0301) |
| 9. | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் (0701) |
| 10. | செங்கல்பட்டு | காஞ்சிபுரம் (0701) |
| 11 | நாகர்கோவில் | நாகர்கோவில் (0801) |
| 12 | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் (0201) |
| 13 | திருப்பூர்
| கோயம்புத்தூர் (0201) |
| 14 | புதுக்கோட்டை
| புதுக்கோட்டை (1501) |
| 15 | இராமநாதபுரம்
| இராமநாதபுரம் (1601) |





















