TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
TNPSC Recruitment: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களை காணலாம்.
ஒருங்கிணைந்த சிவில் பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
குரூப் 2 பிரிவு
- உதவி இன்ஸ்பெக்டர்
- உதவி கமர்சியல் வரி அதிகாரி
- ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி
- Probation Officer
- Sub Registrar, Grade-II
- சிறப்பு உதவியாளர்
- சிறப்பு பிரிவு உதவியாளர்
- சிறப்பு பிரிவு உதவியாளர்
- சிறப்பு செக்சன் அதிகாரி
- சிறப்பு அதிகாரி - ப்ரோக்ராமர்
- Forester
- Forester
குரூப் 2ஏ பிரிவு
- தனிப்பிரிவு உதவியாளர்
- Residential Warden
- Audit Inspector
- Assistant Inspector
- Handloom Inspector
- Supervisor / Junior
Superintendent - உதவியாளர் (ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் வரித்துறை அலுவலக பிரிவு)
- Revenue Assistant
- இதோடு தமிழ்நாடு அமைச்சகங்களில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
- Probation Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கமர்சியல் வரித்துறை அதிகாரி பணிக்கு f B.A., B.Sc., or B.Com ஏதாது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிகவியல் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவி செக்சன் ஆபிசர், சிறப்பு பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- Forester பணியிடத்திற்கு 1. Agriculture 2. Animal Husbandry 3. Botany 4. Chemistry 5. Computer Applications / Computer Science 6. Engineering (All Engineering subjects including Agricultural Engineering) 7. Environment Science 8. Forestry 9. Geology ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குரூப் 2ஏ பிரிவு பணியிடங்கள்:
குரூப் 2ஏ பிரிவு பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு 2024க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, தேர்வாளர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவரது வயது 18, 20, 22 அல்லது 26 வயதுக்குக் குறைவாகவோ அல்லது 30 அல்லது 40 வயதுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
மொத்த பணியிடங்கள் - 2030
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
எழுத்துத் தேர்வு - ரூ.100
ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு ஆகிய இரண்டில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல்நிலை பொதுத்தேர்வு பாடத்திட்டம்:
முதன்மை தேர்வு பாடத்திட்டம்:
குரூப் 2ஏ தேர்வு பாடத்திட்டம்:
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்களில் பிழைத் திருத்தம் செய்ய கால அவகாசம் - 24.07.2024 12.01 AM - 26.07.2024 11.59 PM
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள்: 14.09.2024 காலஒ 09.30 AM முதல் 12.30 P.M. வரை
முதன்மை தேர்வு நடைபெறும் நாள் - தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.07.2024 11.59 PM