மேலும் அறிய

TNPSC GRP-4: அடித்தது ஜாக்பாட்.. க்ரூப்-4 தேர்வில் 4,662 பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TNPSC GRP-4: க்ரூப் 4 தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 4 ஆயிரத்து 662 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC GRP-4: க்ரூப் 4 தேர்வின் மூலம் கூடுதலாக 727 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

க்ரூப் - 4 தேர்வு - கூடுதல் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 935 க்ரூப் 4 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜுலை மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ க்ரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலியிடங்கள் தற்போது 4,662 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்பு கூடுதல் இடங்கள் காலிப்பணியிடங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில்,  அவையும் சேர்க்கப்பட்டு கூடுதல் பணியிடங்கள் நிரப்படும்” என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பணியிடங்கள் குறைவாக உள்ளதாக தேர்வர்கள் புகார் எழுப்பி வந்தனர். அரசு இயந்திரம் முறையாக இயங்கவும்,  கூடுதல் பணிச்சுமையை குறைக்கவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்த, தேர்தல் வாக்குறுதியின்படி காலிப்பணியிடங்களை திமுக அரசு நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது கூடுதல்  பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதோடு, பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

13 லட்சம் தேர்வர்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 4, க்ரூப் 2 மற்றும் க்ரூப் 1 தேர்வுகள் மூலம், தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 3,935 இடங்களை நிரப்ப நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 13 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில் தான், இந்த தேர்வு மூலமாக கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் கூடுதல் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி க்ரூப் 2 தேர்வு

இதனிடையே, நாளை (செப்.28) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் க்ரூப்-2 பிரிவில் 50 பணியிடங்களும், க்ரூப்-2A பிரிவில் 595 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 905 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வை எழுத ஐந்தரை லட்சம் பேர், விண்ணப்பித்துள்ள நிலையில் காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுக்கான விடைத் தாள்கள், வினாத் தாள்கள் அனைத்தும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுகூடங்களுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதோடு, உரிய மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget