டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, நாட்டில் உள்ள 2-வது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெக்ன்ஷியன், பிராசஸ் ஆபரேட்டர் போன்ற பிரிவுகளில் மொத்தம் 154 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் BPCL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
BPCL வேலைவாய்ப்பு
- நிறுவனம் - Bharat Petroleum Corporation Limited (BPCL) / பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
- வேலை வகை - மத்திய அரசு வேலை (Central Govt Jobs)
பணியிடங்கள் விவரம்
- மொத்தம் - 154
- பிராசஸ் டெக்னிஷியன் (Process Technician) - 60 பணியிடங்கள்
- பிராசஸ் ஆபரேட்டர் (Process Operator/Operator) - 64
- டெக்னிஷியன் / ஆபரேட்டர் (கெமிக்கல்) (Technician/Operator) - 13
- டெக்ன்ஷியன் (எலக்ட்ரிக்கல்) (Technician, Electrical)- 17
கல்வித் தகுதி : கெமிக்கல் என்ஜினியரிங் / கெமிக்கல் டெக்னலாஜி, டிப்ளமோ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் அவசியம். இல்லாவிடில் அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியைப் பொறுத்து மாதம் ₹26,500 முதல் ₹34,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதனுடன் நிறுவன விதிகளின்படி DA, HRA, மருத்துவ வசதி, PF, விடுப்பு உள்ளிட்ட பிற சலுகைகளும் வழங்கப்படும்.
- விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்BPCL வேலைவாய்ப்பு
- விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.08.2026
- பணியிடம் - மும்பை மற்றும் கொச்சி
- விண்ணப்ப கட்டணம் - ரூ.590
- அதிகாரப்பூர்வ இணையதளம் - https://www.bharatpetroleum.in
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி (SC / ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(PwBD (OBC) 13 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படியும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதாவது, கணினி அடிப்படையிலான சோதனை (CBT) திறன் / தேர்ச்சித் தேர்வு (Skill / Proficiency Test - SPT)
வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை (Pre-Employment Medical Examination)
ஆவண சரிபார்ப்பு (Document Verification)
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bharatpetroleum.in/images/files/bpcl-kr-and-mr-non-mgmt-rect-notification-july-26.pd
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















