TNPSC Technical Results: டி.என்.பி.எஸ்.சி தொழில்நுட்ப தேர்வு முடிவு வெளியீடு! நோட் பண்ணிக்கோங்க
TNPSC Combined Technical Services Results Out: டி.என்.பி.எஸ்.சி (TNPSC) , ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) , ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (டிப்ளமோ/தொழில்துறை பயிற்சி நிலை) முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் முடிவுகளை TNPSC வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Link:- https://t.co/KF7IB6fyK9 pic.twitter.com/pCHqhI0tmD
— TNPSC (@TNPSC_Office) March 29, 2025
TNPSC தேர்வு முடிவுகளை 2025-ல் எப்படி பார்ப்பது?
- தேர்வர்கள், முதலில் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ TNPSC இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் இருக்கும் ‘Results’ பகுதியைக் கிளிக் செய்யவும்.
- ‘ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு 2025’ என்பதைத் தேடி, தொடர்புடைய இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண் மற்றும் பிற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
- மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை உள்ளிட்ட முடிவுகள் திரையில் காட்டப்படும்.
- உங்களது முடிவுகளை பதிவிறக்கம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் (டிப்ளமோ/தொழில்துறை பயிற்சி நிலை) விண்ணப்பதாரர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை TNPSC, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வு 9 நவம்பர் 2024, 11 நவம்பர் 2024 முதல் 16 நவம்பர் 2024, 19 ஜனவரி 2025 மற்றும் 17 பிப்ரவரி 2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
முடிவுகள் வெளியிடப்படாத பதவிகள்:
இந்நிலையில், ஜனவரி 10, 2025 தேதி உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, பின்வரும் பதவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை:
- சர்வேயர் - குறியீடுகள் 3378 மற்றும் 3551
- கள சர்வேயர்
- வரைவாளர் - குறியீடு 3552
- வரைவாளர், தரம்-III
- சர்வேயர்-கம்-உதவி வரைவாளர் - குறியீடு 3234





















