TN MRB Recruitment: சுகாதாரத் துறையில் பிஸியோதெரபிஸ்ட் அரசு பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, ஊதியம்..!
TN MRB Recruitment 2024: 47 பிஸியோதெரபிஸ்ட் அரசு பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில் 47 பிஸியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 7 கடைசித் தேதி ஆகும்.
சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பிஸியோதெரபிஸ்ட் இடங்கள் குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி பிஸியோதெரபிஸ்ட் கிரேடு 2 பிரிவில் 47 காலியிடங்கள் உள்ளன. 46 புதிய காலி இடங்களும் 1 பழைய இடமும் உள்ளன.
கல்வித் தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பிஸியோதெரபிஸ்ட் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்சி, எஸ்சி அருந்ததியின பிரிவுக்கு 59 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பிரிவுக்கு 42 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500
ஊதியம் எவ்வளவு?
15ஆம் நிலையின்படி, பிஸியோதெரபிஸ்ட் பணிகளுக்கு ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு எப்போது? எப்படி?
இவர்களுக்கான தேர்வு தேதி எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும். தமிழ் தகுதி தேர்வு, ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
* தேர்வர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில், https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/LoginAction_input.action என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் செய்ய வேண்டும்.
* ஏற்கெனவே முன்பதிவு செய்யாதவர்கள், https://tnmrbphy24.onlineregistrationform.org/MRB/instructions.jsp என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
பாடத்திட்டம் என்ன?
https://tnmrbphy24.onlineregistrationform.org/MRBDOC/Syllabus.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, பிஸியோதெரபிஸ்ட் பணிக்கான பாடத் திட்டத்தைப் பெறலாம்.
வேலை குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண: https://mrb.tn.gov.in/pdf/2024/Physiotherapist_Gr_II_181024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://mrb.tn.gov.in/