மேலும் அறிய

TN MRB Recruitment: ரூ.1.77 லட்சம் வரை ஊதியம்: அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க.. இன்றே கடைசி

1,021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (அக்டோபர் 25) கடைசித் தேதி ஆகும்.

1,021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (அக்டோபர் 25) கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  

இந்தப் பணிக்கு தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்பட உள்ளது என்றும் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

அதேபோல 2020ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வெளியான அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதால், அப்போது விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

நவம்பர் மாதத்தில் இவர்களுக்கான கணினிவழி / எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. 

கல்வித் தகுதி

* எம்பிபிஎஸ் படிப்பு.
* மெட்ராஸ் மெடிக்கல் பதிவுச் சட்டம், 1914-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பயிற்சியாளராக இருக்க வேண்டும்.
* பயிற்சி மருத்துவராகக் குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும். 
* தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 

தேர்வு முறை

தமிழ் மொழி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு 1 மணி நேரத்துக்கு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் அனைத்துப் பிரினரும் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயம். அப்போதுதான் மருத்துவத் தேர்வுக்கான தாள் திருத்தப்படும். 

கணினி வழித் தேர்வு / எழுத்துத் தேர்வு 2 மணி நேரங்களுக்கு நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். எஸ்சி/ எஸ்சி அருந்ததியர் / எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால் போதும். 

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்தித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்சி அருந்ததியர் மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதும். 

தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

TN MRB Recruitment: ரூ.1.77 லட்சம் வரை ஊதியம்: அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க.. இன்றே கடைசி

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும். 
* முகப்புப் பக்கத்தில் Online Registration என்ற தெரிவை க்ளிக் செய்யவும். 
* Assistant Surgeon (General) என்ற பதவியை க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம்.
* மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயமாகும். அனைத்துத் தகவல்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும். * வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும் தேர்வர்கள் பதிவேற்ற வேண்டியது அவசியம். இல்லையெனில் விண்ணப்பம் முழுமை பெற்றதாகக் கருதப்படாது. 

கூடுதல் விவரங்களுக்கு: http://mrb.tn.gov.in 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Embed widget