மேலும் அறிய

CM Stalin: 5 ஆண்டு ஆட்சியில் எவ்வளவு பேருக்கு எந்தெந்த துறைகளில் அரசு வேலை? பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்!

தங்களின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், மொத்தம் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 131 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

''பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கின்ற தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக, கிட்டத்தட்ட 38 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்''- முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 வெற்றியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

எந்தெந்த துறையில் அரசு வேலை?

தொடர்ந்து விழாவில் அவர் பேசும்போது, ’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 45 ஆயிரத்து 126 பேர் இதுவரை வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 24 ஆயிரத்து 927 பேர் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 12 ஆயிரத்து 894 பேர் சேர்ந்திருக்கிறார்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 11 ஆயிரத்து 244 பேர் சேர்ந்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், பணியின்போது இயற்கை எய்தும் அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டத்தின்கீழ் 5 ஆயிரத்து 899 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

ஐந்தாண்டு காலத்தில்..

அதேபோல பல்வேறு அரசுத் துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54 ஆயிரத்து 864 பேர் சேர்ந்திருக்கிறார்கள். விளையாட்டு இடஒதுக்கீட்டில், 177 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

இவ்வாறு இந்த ஐந்தாண்டு காலத்தில், மொத்தம் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 131 இளைஞர்களுக்கு பணி நியமனத்தை வழங்கியிருக்கிறோம்.

38 லட்சம் வேலைவாய்ப்புகள்

இதையெல்லாம், அரசுத் துறைகளில் செய்தது என்றால், பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கின்ற தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக, கிட்டத்தட்ட 38 இலட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget