Job Alert: டிகிரி முடித்திருந்தாலே போதும் அரசு வேலை..! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Job Alert: திருநெல்வேலியில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு தகவல்களை கீழே காணலாம்.
திருநெல்வேலியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவில் ‘District Resource Person’ மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB& CB) உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- இதற்கு விண்ணப்பிக்க Sociology, Social work, Social Work Management ஆகிய துறையில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆறு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன், சுய உதவிக் குழுக்கள் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தில் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு பணிகளில் குறைந்தது 8 ஆண்டு பணி முன் அனுபவம் இருப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- நிதி நிர்வாகம் மற்றும் நிர்வாக திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
- அக்கவுண்டிங் மற்றும் ஆடிட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.
- NRLM திட்டங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
- எம்.எஸ். ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
பணிக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in-என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
கவனிக்க..
- இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
- இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள்/முன்னுரிமை ஏதும் வழங்கப்படமாட்டாது.
- தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
இணையவழி விண்ணப்பக் காலம் 31.03.2023 காலை 11.00 மணி முதல் 10-04-2023 மாலை 5.00 மணி வரை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-04-2023 மாலை 5.00 மணி வரை
ஊதிய விவரம், வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2023/03/2023033124.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Aishwarya Lekshmi: பூங்குழலியாக மாறிய ஐஸ்வர்யா லட்சுமி..! பொன்னியின் செல்வன் குழு பகிர்ந்த வீடியோ..!
கோவில் திருவிழாவில் செருப்பு, துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்து விநோத வழிபாடு