மேலும் அறிய

Job Alert : தமிழில் எழுத, படிக்க தெரியுமா? ரூ.50 ஆயிரம் வரை மாத ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி? இதைப் படிங்க!

Job Alert : தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக  உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம். 

பணி விவரம்: 

அலுவலக உதவியாளர்

இரவுக்காவலர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

அலுவலக உதவியாளார் பணி

இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இரவுக்காவலர் பணி 

இதற்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022- இன் படி பொதுப்பிரிவினர் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின பிரிவினர் / ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: 

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எார்.303 நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 11.10.2017, அரசாணை எண்.305 நிதி (ஊதியக்குழு) துறை நாள்: 13.10.2017ப்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

அலுவலக உதவியாளார் - ரூ.15,700 - ரூ.50,000

இரவுக்காவலர் - ரூ.15,700 - ரூ.50,000/-

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, பற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அஞ்சலில் விண்ணப்ப படிவத்தினை அனுப்பவேண்டும். சுய முகவரியுடன் கூடிய ரூ.25/-அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1(104) inches postal cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

கவனிக்க:

  •  வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இன சுழற்சி முறைப்படி நியமனங்கள் பின்பற்றப்படும்.
  •  ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 
  • நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. 
  • விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரீசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். 
  • நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உண்டு.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறிந்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பிவைக்கப்படும்.

விண்ணப்பம் அணுப்ப வேண்டிய முகவரி :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 24.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

ஆணையாளர்
ஊராட்சி ஒன்றியம்
கருங்குளம்- 628 809
தூத்துக்குடி மாவட்டம்.

தொலைபேசி எண் - 04630 263225

அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய இணையதளம் www.thoothukudi.nic.in  - இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.04.2023 மாலை 5.45 மணி

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/03/2023032478.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க..

UPSC Recruitment 2023: விண்ணப்பித்து விட்டீர்களா? யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; நாளை மறுநாள் கடைசி!

UPSC JE recruitment 2023: 146 பணியிடங்கள்; யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Embed widget