Jipmer Recruitment : செவிலியர் படிப்பில் தேர்ச்சி பெற்றவரா? ஜிப்மர் மருத்துவமனையில் வேலை; முழு விவரம்!
Jipmer Recruitment : ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ( Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research- Jipmer ) காலியாக உள்ள 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Nursing Officer- 433
கல்வித் தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. அல்லது முதுகலை நர்சிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய செவிலியர் ஆணையம், மாநில செவிலியர் ஆணையம் ஆகியவற்றில் பதிவு செய்திருப்பவராக இருக்க வேண்டும் அல்லது நர்சிங் அல்லது Midwifery துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியின உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இந்த பணிக்கு ஊதிய அடிப்படை லெவல் 7 -ன் (Level 7 of Pay Matrix of 7th CPC) படி, மாதம் ரூ,44,900 ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு பாடத்திட்டம்:
தகுதித் தேர்வில் 100 MCQ கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு நேரம் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். 70 சதவீத கேள்விகள் செவிலியர் பாடத்தில் இருந்து கேட்கப்படும். ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகியவைகளில் இருந்து 30 சதவீத கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
செவிலியர் அதிகாரிகள் பணிக்கு வரும் ஏழாம் தேதி முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.jimper.edu.in.
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிகலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01/11/2022
முக்கியமான நாட்கள்:
ஜிப்மர் இணையத்தில் ஹால் அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜிப்மர் இணையதள முகவரி: www.jimper.edu.in.
The Deputy Director (Admn.),
Administration – I (Rect. Cell)
JIPMER Administrative Block,
Dhanvantri Nagar P.O,
Puducherry - 605 006.
தொடர்புக்கு:
இ-மெயில் முகவரி- jipmergrpbandc@gmail.com
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் சந்தேகம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 91-7353945551 என்றில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டும் தொடர்பு கொள்ளலாம்.