Jobs: மாமல்லபுரம் அரசுக் கல்லூரியில் வேலை: இந்த டிகிரி இருந்தால் போதும்- விவரம் இதோ!
மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் பேராசிரியருக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சிற்பக் கல்லூரியில் பல்வேறு துறை சார்பில் ஏராளமான மாணவர் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர். மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரியில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் 10 பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பகுதி நேர அடிப்படையில் பணியாற்ற கீழ்க்கண்ட துறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எந்தெந்த துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளன ?
கோயில் கட்டிடக்கலை - இரண்டு இடங்கள்
கற்சிற்பம் - இரண்டு இடங்கள்
சுதைச் சிற்பம் - இரண்டு இடங்கள்
உலோகச் சிற்பம் - ஒரு இடம்
மரச் சிற்பம் - ஒரு இடம்
மரபு வண்ணம் - ஒரு இடம்
தமிழ் - ஒரு இடம்
அடிப்படைக் கல்வித் தகுதி என்ன ?
தமிழில் முதுகலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறிப்பிட்ட சிற்ப பாடப்பிரிவில் BSC/ BFA பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மரபு கட்டிடக்கலையில் BSC/ B.TECH பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் கல்வி தகுதி இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்
நேரடியாக கல்லூரியில் இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04/07/2024
வயது வரம்பு : 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
தகுதி தேர்வு :
எழுத்து தேர்வு, வரைபடத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வினை உள்ளடக்கிய தகுதி தேர்வில் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெறுதல் அவசியம்.
மேற்கண்ட பகுதி நேர ஆசிரியருக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும்.
https://artandculture.tn.gov.in/sites/default/files/appointmentoftemporaryartteacherspost.pdf என்ற இணைப்பின்மூலம் மேற்கண்ட விவரங்களை அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://artandculture.tn.gov.in/