மேலும் அறிய

மயிலாடுதுறை அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி.. முழு விவரம் இதோ

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மூன்று பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 6 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக, தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 24, 2025 முதல் ஜூன் 26, 2025 வரை விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் காலிபணியிட விவரம் 

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் கீழ்க்கண்ட பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன:

  • காரைமேடு அரசு

    ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி 
  •   வணிகவியல் – 1 காலியிடம்
  •    பொருளாதாரம் – 1 காலியிடம்

     (மொத்தம்: 2 காலியிடங்கள்)

 

  • மாதானம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி

 

  •    ஆங்கிலம் – 1 காலியிடம்
  •    கணக்கு – 1 காலியிடம்
  •    இயற்பியல் – 1 காலியிடம்

     (மொத்தம்: 3 காலியிடங்கள்)

கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி

 

  •    இயற்பியல் – 1 காலியிடம்

      (மொத்தம்: 1 காலியிடம்)

 

மேற்கண்ட மூன்று பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 6 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆர்வமும், உரிய கல்வித்தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் காலம்: ஜூன் 24, 2025 முதல் ஜூன் 26, 2025 தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், மயிலாடுதுறை.

விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம்: ஜூன் 26, 2025 அன்று மாலை 05:45 மணிக்குள்.

விண்ணப்பதாரர்கள் தங்களது எழுத்து மூலமான விண்ணப்பங்களை உரிய கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மேற்கண்ட முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

தகுதி மற்றும் பிற தகவல்கள்

இந்தப் பணியிடங்கள் தற்காலிகமானவை என்றும், தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு மூலம் இந்த நியமனங்கள் நடைபெறவுள்ளன.

விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்குரிய முதுகலைப் பட்டப்படிப்புடன், பி.எட் (B.Ed) பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அறிவிப்பு, ஆசிரியர் பணி வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், விவரங்களுக்கு,

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget