மேலும் அறிய

டிப்ளமோ முடித்தவர்களா நீங்கள்? தமிழக மருத்துவத்துறையில் 238 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணிடுங்க!

தமிழக மருத்துவத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் மற்றும் இருட்டறை உதவியாளர் என 238 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

தமிழ்நாடு மருத்துவத்துறையில் செவிலியர்கள், மருத்துவர்கள், என பல்வேறு துறைகளில் பணிக்கு சேர வேண்டும் என்றால், மருத்துவ வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். அவ்வப்போது பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும் நிலையில், தற்போது இளநிலை ஆய்வாளர் மற்றும்  இருட்டறை உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்..

டிப்ளமோ முடித்தவர்களா நீங்கள்? தமிழக மருத்துவத்துறையில் 238 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணிடுங்க!

இளநிலை ஆய்வாளர் பணிக்கானத் தகுதிகள்: ( Junior Analyst)

 காலிப்பணியிடங்கள் : 29

கல்வித்தகுதி:

Master’s Degree in chemistry or Biochemistry or Microbiology or Dairy chemistry or Food Technology

Food and Nutrition or bachelor’s Degree in Technology in Dairy /Oil or veterinary sciences

வயது வரம்பு:

இந்தப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : மாதம் ரூபாய் 36, 400 முதல் 1,15, 700 என நிர்ணயம்.

இருட்டறை உதவியாளர் பணிக்கானத் தகுதிகள் (Dark Room Assistant):

மொத்த காலிப்பணியிடங்கள் : 209

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்ததோடு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

இதோடு Dark Room assistant சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும்  உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://mrbonline.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 5, 2022

 விண்ணப்பக்கட்டணம்:

இளநிலை ஆய்வாளர்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000,

SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 500 என நிர்ணயம்.

இருட்டறை உதவியாளர்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 600,

 SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300 என விண்ணப்பக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வானது 200 வினாக்களுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் .

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.mrb.tn.gov.in/pdf/2022/JA_notification_160322.pdf மற்றும் https://www.mrb.tn.gov.in/pdf/2022/DRA_notification_160322.pdf  என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Embed widget