B.Pharm/ D.Pharm முடித்தவர்களாக நீங்கள்? தமிழக அரசில் 84 காலிப்பணியிடங்கள்: உடனே அப்ளே பண்ணிடுங்க!
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிப்பார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் சென்னையில் காலியாக உள்ள 84 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப்பணியாளர்கள் சீனியாரிட்டி முறையில் தேர்வு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைக்குத் தேவையாக அனைத்துப் பணியாளர்களையும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே பணியில் சேர முடியும் என அரசாணை வெளியிடப்பட்டதோடு தற்போது நடைமுறையில் உள்ளது. இதோடு சில பணிகளுக்கு தேர்வு இல்லாமலும் பணியமர்த்தப்படுவார்கள் என்று உள்ளது. இந்நிலையில் தற்போது சித்தா, ஆயுர்வேதம், ஹேமியோபதி போன்றவற்றில் காலியாக உள்ள84 மருந்தாளநர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மருந்தாளநர் பணிகளுக்கானத் தகுதிகள்:
மொத்த பணியிடங்கள் – 84
மருந்தாளர் (சித்தா) – 73
மருந்தாளுநர் ( ஆயுர்வேதம்) 6
மருந்தாளுனர்( யுனானி) 2
மருந்தாளுனர் ( ஹோதியோபதி)- 3
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பி.பார்ம், டி.பார்ம் (B.pharm, D.Pharm) படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
http://www.mrbexam.in/howtoapply.php என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, இப்பணிக்குத் தேவையான அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.
இதனையடுத்து அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து வருகின்ற மார்ச் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 600விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, டிஏபி, உள்ளிட்ட பிரிவினர் ரூபாய் 300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பக்கட்டணத்தை இணைய வங்கி அல்லது UPI முறையில் செலுத்தலாம்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிப்பார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வாகும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூபாய் 35, 400 முதல் ரூபாய் 1,12,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசில் பணிக்கு சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ள ஆண் மற்றும் பெண்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, http://www.mrbexam.in/howtoapply.php என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.