TNLDA Recruitment: மருத்துவரா? நேர்காணல் மட்டுமே; ரூ.56,000 ஊதியம்- அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
TNLDA Recruitment: தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இங்கே காணலாம்.
தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமையில் உள்ள வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஐ.டி. அதிகாரி
கால்நடை மருத்துவர்
கல்வித் தகுதி:
- ஐ.டி. அதிகாரி பணிக்கு கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சாப்ட்வேர் டெவலப்மெண்ட் துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கால்நடை மருத்துவர் பணியிடத்திற்கு BVSc & AH ) / இளங்கலை அல்லது M.V.Sc in Animal Husbandry Economics/Animal Husbandry Statistic முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
- 75 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி வழிக்கல்வியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
IT-Executive - ரூ.50,000/-
Veterinarian- ரூ.56,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் நபர்கள் தெரிவு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- PAN கார்டு
- முகவரி
- கல்விச் சான்றிதழ்
- பணி அனுபவ சான்றிதழ்
- சுயவிவர குறிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tn.gov.in/detail_contact/86441/5 - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://idm.vdmat.com/tnlda_job_app/assets/pdf/Tnlda_eligibility_IT.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2024