மேலும் அறிய

TNHB Recruitment: எம்.பி.ஏ.படித்தவரா? மார்க்கெட்டிங் துறையில் வேலை - முழு விவரம்!

Tamil Nadu Housing Board Recruitment: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அலுவலகத்தில் உள்ள காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


TNHB Recruitment: எம்.பி.ஏ.படித்தவரா? மார்க்கெட்டிங் துறையில் வேலை - முழு விவரம்!

பணி விவரம்

மார்க்கெட்டிங் அதிகாரி  

கல்வித் தகுதி: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் படித்திருக்க வேண்டும். 

இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 25 வயது நிரம்பியவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் சுய விவர குறிப்புடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

Managing Director,

Tamil Nadu Housing Board,

Chennai.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.01.2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையம் ( Tamil Nadu Public Service Commission )

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் ஜனவரி-2024 மாதத்தில் வெளியிடப்படுவதாகவும் மேற்படி தொகுதி-4 பணி காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு ஜூன் -2024 மாதத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகள்

இப்போட்டித் தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி-2024 மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://tnpsc.gov.in/ இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  ‘D’ – பிளாக் தரை தளம் புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம் செங்கல்பட்டிற்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  மேலும் விவரங்களுக்கு 044-27426020  அல்லது 9499055895 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு  மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எல். வேலைவாய்ப்பு

டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்திற்கான  தகுதிகள் என்னென்ன என்று கீழே காண்போம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 10 (2023)ஆம் தேதி கடைசி ஆகும். 

பணி விவரம்

துணை மேலாளர் 

கல்வித் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க  B.E. / B.Tech சிவில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது 26 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்

விண்ணப்பதாரர்கள் 46 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி இடம்

கரூர்

ஊதிய விவரம்

இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ.2.39 லட்சம் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. திறன் அடிப்படையில் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

 www.tnpl.com/careers - என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சுய விவர குறிப்பு வடிவத்தின் படி அஞ்சல் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 10/01/2023

அஞ்சல் முகவரி:

GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, 
KARUR DISTRICT, TAMIL NADU. 

https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/12/TNPL_DGM-Civil-Advt-27122023.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காணலாம். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget