Job Alert : மாத ஊதியம் ரூ.60 ஆயிரம்; மாவட்ட நலவாழ்வு மையங்களில் வேலை; கூடுதல் விவரம்!
Job Alert : திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வரும் 27 நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
பணி விவரம்:
- மருத்துவ அலுவலர் (Medical Officer)
- Staff Nurse
- MPHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II)
- சுகாதார உதவியாளர் (Hospital Worker /Support Staff)
கல்வித் தகுதி :
மருத்துவ அலுவலர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை மருத்துவர் படிப்பு (MBBS) முடித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஸ்டாஃப் நர்ஸ் பணியிடத்திற்கு இளங்கலை செவிலியர் பட்டம் படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டமாக இருக்க வேண்டும்.
MPHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II) பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல், தாவரவியல்,விலங்கியல் ஆகிய படிப்புகளை மேல்நிலை படிப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுகாதார உதவியாளர் (Health worker/support Staff) பணியிடத்திற்கு 8 -ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதிய விவரம்:
- மருத்துவ அலுவலர் -ரூ.60,000
- Staff Nurse- ரூ.18,000
- MPHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II) 27 - ரூ.14,000
- Hospital Worker /Support Staff - ரூ.8,500
வயது வரம்பு:
மருத்துவ அலுவலர், சுகாதார உதவியாளர் மற்றும் ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
MPHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II) பணிக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்ணப்பிக்க https://tiruppur.nic.in/ அல்லது https://tiruppur.nic.in/notice_category/recruitment/ - என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
கவனிக்க..
இந்தப் பணி எந்த காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டது.
திருப்பூர் மாவட்ட நலச்சங்கத்தின் அறிவிக்கை நாள் 13.01.2023-ன் படி ஒப்பந்த அடிப்படை செவிலியர் பதவிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் இந்த அறிவிக்கையின்படி மறுபடியும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் போதைய அறிவிக்கை (03.02.2023)-ன்படி அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்த அடிப்படை செவிலியர் பதவிக்கும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
திருப்பூர் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.02.2023
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/02/2023020322.pdf - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.
இதையும் படிங்க..
Job Alert : மாநில அரசுப் பணி; மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்; ஊதியம் எவ்வளவு? முழு விவரம்!
IAF Recruitment : +2 தேர்ச்சி பெற்றவர்களா? இந்திய விமானப் படையில் வேலை; ஆள்சேர்ப்பு முகாம் விவரம்!