Job Alert : மாநில அரசுப் பணி; மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்; ஊதியம் எவ்வளவு? முழு விவரம்!
Job Alert : பெண்களுக்கான வேலைவாய்ப்பு : எந்த துறையில் பணி உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
![Job Alert : மாநில அரசுப் பணி; மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்; ஊதியம் எவ்வளவு? முழு விவரம்! Tamil Nadu Government jobs block coordinators job under tamil nadu state rural livelihoods mission in kanniyakumari Job Alert : மாநில அரசுப் பணி; மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்; ஊதியம் எவ்வளவு? முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/18/9d3ae18c64221b501dc7c1d6b2986ebb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலகில் உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் வாழ்வாதார திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு அகஸ்தீஸ்வரம் , குருந்தன்கோடு , முஞ்சிறை ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இலங்களை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக வேண்டும்.
MS-Office 3 மாத காலம் பயின்றதற்கான சான்றிதழ் அல்லது கணினி அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
இதற்கு பெண்களு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்திற்குள் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.
ஊதிய விவரம் :
இந்தப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.
வயது வரம்பு :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவர்:
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக த் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்ணப்பிக்க https://kanniyakumari.nic.in/என்ற இணையத்தளத்தில் உள்ள விவரங்கள் படி விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி, வயது, முன் அனுபவச்சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம்,
கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர்கோவில் - 629 001.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10.02.2023 மாலை 5.45 மணி.
பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2023/01/2023013190.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)